ஈஸ்வரி கேட்டரிங் ஓபனிங்கில் பாக்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஈஸ்வரி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா கேட்டரிங் திறப்பு விழாவை ஞாயிற்றுக்கிழமையான நாளை வைத்துக் கொள்ளலாம் என தன்னுடைய மாமனாரிடம் சொல்ல அவர் சரியென சொல்ல ஈஸ்வரி நீயே முடிவு பண்ணிட்டியா என கோபப்படுகிறார்.

அடுத்து இந்த விழாவில் நீங்க ஒரு விளக்கு ஏத்தணும் அத்தை ஒரு விளக்கு ஏத்தணும் ராஜசேகர் சார் ஒரு விளக்கு ஏத்தணும் என சொல்ல ஈஸ்வரி நான் எல்லாம் வரமாட்டேன் என்ன வச்சு எதுவும் பிளான் பண்ணாதீங்க என அதிர்ச்சி கொடுக்கிறார். பாக்கியா நீங்க இல்லாம எப்படி அத்தை என்ன வருத்தப்பட கடைசியில் ராமமூர்த்தி அவ வருவா நீ அமைதியா இரும்மா என சொல்கிறார்.

அடுத்து ராமமூர்த்தி ராதிகா வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்ல ராதிகா ஷாக் ஆகிறார். உடனே தன்னுடைய பாஸ்க்கு போன் போட்டு ஓப்பனிங் பங்ஷன் நடக்கப்போவதை உறுதி செய்து கொள்கிறார். அடுத்து இனியா என்ன ட்ரெஸ் போடுறது என தாத்தாவிடம் கேட்க கோபி நீ எல்லாம் போக வேண்டாம் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

மேலும் பாக்கியா ராஜசேகர் ஆபிஸ் சென்று அழைப்பு கொடுக்கிறார் அதே போல் தன்னுடைய ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் தன்னுடன் படிப்பவர்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கிறார்.

பிறகு மறுநாள் எல்லோரும் கேட்டரிங் திறப்பு விழாவிற்காக கிளம்ப அப்போது செழியன் ஜிம் கிளம்ப பாக்யா நீ வரலையா என கேட்க என்னிடம் யாரும் சொல்லவில்லை என சொல்ல பாக்கியா நீ கண்டிப்பா வரணும் என கூப்பிட நான் வரல என செழியன் கோபமாக சொல்லிவிட்டு சென்று விட ஜெனி அவன் வருவான் நான் வர வைக்கிறேன் என சொல்லி குழந்தையின் மீது சத்தியம் வாங்கி செழியனை பங்ஷனுக்கு வர சம்மதிக்க வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.