பாக்கியலட்சுமி சீரியல் ஜெனிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Divya Ganesh About Her Marriage : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்யாவின் மூத்த மருமகளாக நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.

இதற்கு முன்னதாக சன் டிவி உட்பட பல்வேறு சேனல்களில் பல சீரியல்களில் நடித்துள்ள இவருக்கு பாக்கியலட்சுமி சீரியல் நல்ல ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஏற்கனவே பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நிச்சயதார்த்தம் முடிந்தது. பின்னர் திடீரென சில காரணங்களால் இவர்களின் திருமணம் நின்று போனது. அதன்பின்னர் ஆர்கே சுரேஷ் சினிமா பைனான்ஸியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய திவ்யா கணேஷிடம் ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் என கேட்க அவர் விரைவில் என பதிலளித்துள்ளார். ஆனால் மாப்பிள்ளை யார் என்பது குறித்து எந்தத் தகவலையும் அவர் வெளியிடவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் திவ்யாவை திருமணம் செய்து கொள்ளப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.