பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. விறுவிறுப்பான கதை களத்துடன் பயணித்து வரும் இந்த சீரியலில் நடித்து வரும் அனைவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

குறிப்பாக கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் சீரியலுக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறார். அதேபோல் பாக்கியா, எழில் செழியன், ஜெனி, அமிர்தா, ஈஸ்வரி, ராமமூர்த்தி என்று எல்லா கதாபாத்திரத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் இவர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா 15000 சம்பளமாக வாங்க கோபியாக நடிக்கும் சதீஷ் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா ஒரு எபிசோடுக்கு 12 ஆயிரம் சம்பளம் வாங்குவதாக தெரியவந்துள்ளது.

இவர்களைத் தொடர்ந்து எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யா கணேஷ் ஆகியோர் எபிசோடுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குகின்றனர்.

மேலும் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா 8,000 ரூபாய் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருபவர்களும் கிட்டத்தட்ட 7000 முதல் 10 ஆயிரம் வரை சம்பளம் வாங்குவதாக தெரியவந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.