Web Ads

எனக்கு பேத்தி பிறந்திருக்காங்க.. சந்தோஷத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.!!

பேத்தி பிறந்த சந்தோஷத்தை பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பகிர்ந்துள்ளார்.

baakiyalakshimi serial kambam meena latest post
baakiyalakshimi serial kambam meena latest post

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் தற்போது நிதிஷ் பற்றிய உண்மைகள் இனியாவின் குடும்பத்தினருக்கு தெரிய வர இனியாவை வீட்டுக்கு அழைத்து வந்து விடுகின்றனர். தற்போது வெளியான ப்ரோமோவில் இனியா ஒரு முடிவு எடுத்திருப்பதாக குடும்பத்தினரிடம் சொல்ல, என்ன விஷயம் என்று கேட்கின்றனர் நித்திஷை விவாகரத்து செய்யப் போவதாக சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர்.

என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பான திருப்பங்களுடன் சீரியல் நகர்ந்து வரும் நிலையில் இந்த சீரியலில் செல்வி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒருபவர் கம்பம் மீனா. தற்போது இவருடைய மகனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியாக instagram பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதாவது என் மகன் சூரிய பிரகாஷ் பிறந்தநாள் பரிசாக எனது மருமகள் சிவரஞ்சனி அழகான பெண் குழந்தையை பெற்று கொடுத்திருக்காங்க எனக்கு பேத்தி பிறந்திருக்காங்க என்று மகிழ்ச்சியாக பதிவிட்டு உள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.