சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, கோபப்பட்ட அருணாச்சலம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தினி சி.முத்தையா இயக்கத்தில், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் அசிஸ்டன்ட் கமிஷனருக்கு போன் போட்டு நந்தினி காணாமல் போன விஷயத்தை சொல்லுகிறார். மூணு மணி நேரம் என்பது பெரிய விஷயம் இல்லையே என்று சொல்ல இது அது மாதிரி இல்ல சார் ஏற்கனவே இரண்டு வாட்டி கிட்னாப் பண்ணி இருக்காங்க என்று சொல்ல சரி டீடைல்ஸ் அனுப்புங்க நான் விசாரிக்க சொல்றேன் என சொல்ல சுந்தரவல்லி வந்து வேலைக்காரி போனதுக்கா இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். அவ கண்காணாத இடத்துக்கு போயிருந்தா என்ன பண்ணுவீங்க என்று கேட்க நாங்க என்னவெல்லாம் பண்ணுவோம் நீ போ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் நந்தினி ஒரு குடோனில் மயக்கநிலைல இருந்து எழுந்து உட்கார்ந்து எங்க இருக்கிறோம் என்பதை யோசித்துப் பார்த்து கல்யாணம் அண்ணா என்று கூப்பிடுகிறார். யாரும் வராததால் நந்தினி எழுந்து வந்து கதவை தட்டி யாராவது கதவை திறங்க பயமா இருக்கு என்று சொல்லுகிறார். மேனேஜர் வீட்டுக்கு வந்து செக்கில் கையெழுத்து கேட்க சுந்தரவல்லி வருகிறார். உடனே குடும்பத்தினரும் வந்துவிட சுந்தரவல்லி கையெழுத்து போட்டுவிட்டு செக் புக்கை கொடுக்க மேனேஜர் போகாமல் அமைதியாக நிற்க சுந்தரவல்லி என்ன ஆச்சு என கேட்கிறார். நந்தினி மேடமும் சைன் பண்ணனும் என்று சொல்ல, சுந்தரவல்லி நான் சைன் போட்டாச்சு இன்னொரு மேடம் எங்க போயிருக்காங்கன்னு எனக்கு தெரியாது என்று சொல்ல அவங்களும் சைன் போட்டா தான் செக் பாஸ் ஆகும் என்று சொல்ல இப்போ என்ன பண்ண சொல்றீங்க என்று அருணாச்சலத்திடம் சுந்தரவல்லி கேட்கிறார்.
பிசினஸ பத்தி அவளுக்கு என்ன தெரியும். அவ கையெழுத்து போட்டா தான் இத்தனை பேருக்கு சம்பளம் கிடைக்கும் என்றது அவளுக்கு புரியுமா என்று கோபப்படுகிறார். உடனே மேனேஜர் சம்பளம் போட்டு ஆகணும் மேடம் ஏற்கனவே நேரம் ஆயிடுச்சு இல்லனா பிரச்சனையாகிடும். என்று சொன்னவுடன் சுந்தரவல்லி செக் புக்கை வாங்கி அருணாச்சலத்திடம் கையெழுத்து போடச் சொல்லுகிறார். அருணாச்சலம் தயங்க சுந்தரவல்லி வற்புறுத்தி போடச் சொல்ல அவரும் கையெழுத்து போட போக சூர்யா ஒரு நிமிஷம் என சொல்லி வந்து நிற்கிறார். கையெழுத்து போடாதீங்க நந்தினி வருவா அவ வந்து தான் கையெழுத்து போடுவா என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி கோபப்பட்டு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல அதெல்லாம் எப்படி பண்ணனும்னு எனக்கு தெரியும் ஆனா இந்த செக்குல நந்தினி தான் கையெழுத்து போடணும் என்று உறுதியாக சொல்லுகிறார்.
சூர்யா விவேக்கிற்கு ஃபோன் போட்டு வீட்டுக்கு வா என்னோட பர்சனல் செக் கொடுக்கிறேன் அதுல வேலை செய்றவங்களுக்கு சம்பளம் கொடுத்துவிடு நந்தினி வந்த உன்ன பாத்துக்கலாம் என்று சொல்லி போனை வைக்க விவேக் வருவதாக சொல்லுகிறார். உடனே சூர்யா மேனேஜரை அனுப்பி விடுகிறார். யாரும் கதவை திறக்காததால் நந்தினி ஒரு இடத்தில் உட்கார்ந்து என்ன நடந்தது என்றே தெரியவில்லையே என்று யோசிக்கிறார். அப்போது நந்தினி கடைக்கு போயிட்டு வரும்போது வரும் வழியில் பிரசாதம் கொடுப்பவர்கள் நந்தினியை கூப்பிட்டு கொடுக்கின்றனர். நந்தினியும் பிரசாதத்தை சாப்பிடுகிறார். நந்தினி பிரசாதம் சாப்பிடுவதை பார்த்து அங்கு இருந்த பெண்மணிகள் கண்ணை காண்பித்துக் கொள்கின்றனர் என்ன பிரசாதம் ஒரு மாதிரியா இருக்கு என்று கேட்க நெய் அதிகமாயிடுச்சு அதனாலதான் என்று சொல்ல கொஞ்ச நேரத்தில் மயக்கம் வந்து விழுந்து விடுகிறார்.
உடனே மற்றொரு பெண்மணி போன் பண்ண ஒரு கார் வந்து நிற்காது நந்தினியை ஏற்றி விடுகின்றனர். இதனை நந்தினி யோசித்து விட்டு எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்ன மட்டும் ஏன் கடத்துறாங்க எனக்கு நீ கூட துணையாக இருக்க மாட்டியா கருப்பா என்று சொல்லுகிறார். ஏற்கனவே கடத்தினவங்க யாருன்னு தெரியல இப்போ இன்னொரு வாட்டி நான் யாருக்கு என்ன பாவம் பண்ண என்னை எதுக்கு இப்படி பண்றாங்க என்று யோசிக்கிறார். இந்த நேரம் எல்லாருக்கும் நான் காணாமல் போய் இருக்கிறது தெரிந்திருக்கும் சூர்யா சார் அருணாச்சலம் அய்யாவும் தேடிக்கிட்டு இருப்பாங்க எப்படி நான் இங்கிருந்து தப்பிக்க போறேன் என்று சொல்ல மறுப்பக்கம் சுந்தரவல்லி இடம் சுரேகா அவ எங்க போயிருப்பா என்று சொல்ல அவ எங்கனா போயிருக்கட்டும் நீங்க போய் வேலையை பாருங்க என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
