Pushpa 2

பாக்யா சொன்ன வார்த்தை, ஈஸ்வரி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

பாக்கியா சொன்ன வார்த்தையால், ஈஸ்வரி முடிவு எடுத்துள்ளார்.

baakiyalakshimi serial episode update 09-12-2024
baakiyalakshimi serial episode update 09-12-2024

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவின் அம்மா பாக்யாவிடம் வந்து பேச எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது நீங்க போய் அவங்க கிட்ட பேசிக்கோங்க என்று சொல்ல ராதிகாவின் அம்மா உள்ளே வந்து பேசுகிறார். செழியன் இப்ப எதுக்கு இங்க வந்தீங்க என்று கேட்க எங்க உங்க பாட்டி என்று கூப்பிட்டு ஈஸ்வர்யிடம் வம்பு இழுக்கிறார். என் மாப்பிள்ளைய கடத்திட்டு வந்துட்டீங்களா என்று கேட்க யார் எங்க அது மாதிரி பண்ணல ஏற்கனவே உன் பொண்ண கல்யாணம் பண்ணி அவன் பேனிக் அட்டாக் வந்த வரைக்கும் போதும் ஆனா இப்போ ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு இதுக்கு மேலயும் உங்க கிட்ட விட முடியாது. உங்ககிட்ட விட்டா என் பையனை சாகடித்துவிடுவீர்கள் என்று சொல்ல உடனே ராதிகாவின் அம்மா நான் போலீசுக்கு போவேன் என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி நீ போலீசுக்கு வேணா போ உனக்கு மட்டும் தான் சட்டம் தெரியுமா எனக்கும் தெரியும் கோபி ஒன்றும் குழந்தை கிடையாது அவன் விருப்பப்பட்டு வரணும்னு சொன்னா இங்கே இருக்கும் அவ்வளவுதான் என்று சொல்லி இப்ப நீ போறியா இல்ல கழுத்தை புடிச்சு வெளியே தள்ளவா என்று கேட்க இப்ப நான் போறேன்னா இந்த விஷயத்தை சும்மா விடமாட்டேன் என்று சொன்ன போடி என்று துரத்தி விடுகிறார்.

கிச்சனில் பாக்கிய வேலை பார்த்துக் கொண்டிருக்க அங்கே வந்த ஈஸ்வரி என்ன பாக்யா சாப்பாடு என்று கேட்க சப்பாத்தி பன்னீர் பட்டர் மசாலா என்று சொல்ல, அது கோபிக்கு புடிக்கும் ஆனா இப்ப காரமா சாப்பிடக்கூடாதுல்ல என்று சொல்ல நான் அவருக்கு சமைக்கிறேன் என்று சொல்லவில்லையா அத்தை என்று சொல்ல ஈஸ்வரி பல்பு வாங்குகிறார்.

உடனே என் புள்ளைக்கு எனக்கு சமைச்சுக்க தெரியும் என்று இடியாப்பமும் தேங்காய் பாலும் செய்வதாக சொல்லி அவரை செய்கிறார். பிறகு கோபியை அழைத்து சாப்பாடு போட சப்பாத்தியும் பன்னீர் பட்டர் மசாலாவும்மா என்று கேட்க ஆமா அது உனக்கு இல்ல உனக்காக இடியாப்பமும் தேங்காய் பாலும் செய்திருக்கேன் என்று சொல்ல அதைக் கொடுக்கிறார். கோபியும் அதை சாப்பிட்டுவிட்டு நன்றாக இருப்பதாக சொல்லுகிறார். பிறகு அனைவரும் பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஜெனியின் குழந்தை அழ சாப்பிடு ஜெனி நான் போய் பார்க்கிறேன் என்று சொல்லி பாக்யா சமாதானம் படுத்திக் கொண்டிருக்கிறார் இங்கு நால்வரும் சந்தோஷமாக பேசி சிரிக்க ஜெனிக்கு பிடிக்காமல் போதும் என்று எழுந்து சென்று விடுகிறார்.

மறுபக்கம் ராதிகா சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்கிற ராதிகாவின் அம்மா சாப்பிட கூப்பிடுகிறார் எனக்கு சாப்பிடலாம் வேணாமா என்று சொல்லிவிட்டு கோபிக்கு என் மேல எந்த அக்கறையும் பாசமும் இல்லை என்கிறதை விட அவரும் மயூவ நெனச்சு கூட பாக்கலன்றது தான் ரொம்ப வருத்தமா இருக்கு அவருக்கு உடம்பு சரியில்லன்னு தெரிஞ்சதிலிருந்து மயு கோவிலுக்கு போயிட்டு வந்து அதையேதான் கேட்டுகிட்டு இருக்கா ஆனா அவரு ஹாஸ்பிடல்ல கூட மயூன்ற ஒரு வார்த்தை கூட அவர் வாயில் இருந்து வரல, என்று சொல்லுகிறார்.

நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத ராதிகா அவங்க எல்லாம் அவரோட குழந்தைங்க மயு ஒன்னு அவருக்கு பொறந்த குழந்தை கிடையாது என்று சொல்ல அவரோட குழந்தை வயத்துல இருந்திருந்தா அந்த பாசத்துல வந்திருப்பாரு என்று சொல்ல அப்ப குழந்தையை காமிச்சுதான் பாசத்தை வாங்கணுமா என்று ராதிகா கேட்கிறார். உடனே ராதிகாவின் அம்மா சட்டப்படி நீதான் அவரோட பொண்டாட்டி எந்த குடும்பம் தான் முக்கியம்னா அவரு போனாரோ அந்த குடும்பத்திலிருந்து பிரிச்சி கூட்டிட்டு வருவேன் என்று சொல்லுகிறார்.

கோபி, ஈஸ்வரி,இனியா மற்றும் செழியன் பேசிக் கொண்டிருக்க அவர்கள் என்ன பேசுகிறார்கள்? ஈஸ்வரி என்னை கேட்கிறார்? அதற்கு கோபியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial episode update 09-12-2024
baakiyalakshimi serial episode update 09-12-2024