Avengers End Game

Avengers End Game : உலகமே தற்போது ஒரு படத்துக்காக காத்துகொண்டிருக்கிறது என்றால் அது அவெஞ்சர்ஸ் கடைசி பாகம் படத்துக்குதான் என்பது குழந்தைகளுக்கும் தெரியும்.

ஏற்கனவே வெளியான முதல் மூன்று பாகங்கள் வசூலில் இமாலய சாதனைகள் படைக்க நான்காம் மற்றும் கடைசி பாகம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி பாவம்.. அவெஞ்சர்ஸ் தமிழ் ட்ரைலரால் கதறும் ரசிகர்கள்.!

முன்னெப்போதும் இல்லாத அளவு இப்படத்தை இந்தியாவில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து வருகிறது மார்வெல்.

ஏ.ஆர்.முருகதாஸ் வசனம், ஏ.ஆர்.ரகுமான் இசை என தமிழர்களுக்கு பரிச்சயமான பிரபலங்கள் இதில் பணியாற்றி வருகின்றனர்.

இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். அதேபோல் பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படம் முதல் வார இறுதியில் உலகம் முழுக்க சேர்த்து 300 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வசூல் செய்யும் என ஆருடம் கூறப்படுகிறது.

இது கடைசியாக வெளியான அவெஞ்சர்ஸ் பாகத்தை விட அதிகம் என்பது கூடுதல் தகவல்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.