ஜவான் படத்தில் நடிகர் விஜய் நடித்திருப்பதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் அட்லீ.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

இதைத் தொடர்ந்து தற்போது இவர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி உள்ளார். இன்று உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் தளபதி விஜய் கெஸ்ட் ரோலிங் நடித்திருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இது உண்மை இல்லை முழுக்க முழுக்க வதந்தி, ஒருவேளை விஜய் நடித்திருந்தால் அதை நானே அறிவித்திருப்பேன் என பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.