Bigil Teaser Announcement | Bigil Audio Launch | Atlee Speech | Thalapathy Vijay | Kollywood Cinema news | Tamil Cinema news | Bigil Movie Updates
திரைப்படம் தயாரிப்பது தொடர்பாக ஹாலிவுட்டிலிருந்து வந்த அழைப்பால் இயக்குனர் அட்லீ ஆடிப்போன சம்பவம் நடந்துள்ளது.

Atlee happy with hollywood actor twitt – ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யரான இவர் ஷங்கரைப் போலவே அதிகமான பட்ஜெட்டில் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

நடிகர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் பில் டியூக் இவருக்கு ஒரு டிவிட் செய்துள்ளார். பில் டியூக் பிரபல நடிகர் அர்னால்ட் நடித்த கமாண்டோ திரைப்படம் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் அட்லியை டேக் செய்து போட்ட பதிவில் ‘ ஹாலிவுட்டிற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்… எங்கள் நாடு உங்களுடன் ஒன்றாக இணைந்து திரைப்படங்களை தயாரிப்பதில் ஏன் இவ்வளவு கடினம்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.

atlee

இதற்கு பதில் கூறியுள்ள அட்லீ ‘ கடினம் என்று பொதுவாக கூறப்படும் ஒன்று. சினிமா மீது இருக்கும் காதல் காரணமாக வெவ்வேறு மக்கள் ஒன்றாக இணைந்து திரைப்படங்களை உருவாக்க முயலும் போது இது சுலபமாகவும், ரசிகர்கள் விரும்பும் படியும் அமைகிறது.

உங்களால் நான் கவனிக்கப்பட்டது பெருமையாக இருக்கிறது. இப்படித்தான் பெரிய கனவுகள் உருவாகிறது. உங்களுக்கு என் மரியாதை’ என பதிவிட்டுள்ளார்.

சர்கார் வெளியான நேரத்தில், இதே நடிகர் பில் டியூக் இயக்குனர் முருகதாஸை டேக் செய்து அவருடைய இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு டிவிட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.