அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம்: ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம்..

அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்..

அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்கி வரு​கிறார் அட்லி. இதை சன் பிக்​சர்ஸ் பிரம்மாண்ட பட்​ஜெட்டில் தயாரிக்​கிறது. தீபிகா படு​கோன் நாயகி​யாக நடிக்​கிறார்.

இதில் அல்லு அர்​ஜுன் 4 வேடங்​களில் நடிப்​ப​தாகச் செய்திகள் வெளி​யாகி இருந்​தன. இந்​தப் படத்​துக்​குப் பிரபல ஜப்பானிய-பிரிட்​டிஷ் நடனக் கலைஞரும் இயக்குநரு​மான ஹோகுடோ கோனிஷி பணி​யாற்​றி​ உள்ளார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்​குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோ​ரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்​டது.

இதுபற்றி மிருணாள் தாக்​குர் தெரிவிக்கையில், ‘ஓ அப்படியா? அதில் நடிக்கிறே​னா? அது நடப்​ப​தற்​காகப் பிரார்த்தி​யுங்​கள். நடந்தால் கொண்​டாடுவோம்’ என்று தெரி​வித்​துள்​ளார். இதனால் அவர் இதில் நடிக்கவில்லை என தெரி​கிறது.

ஆனால், ராஷ்மிகா இப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்​குப் படத்​தில் முக்​கிய கதா​பாத்​திரம் என்​றும் ஆக்சன் காட்சிகளும் அவருக்கு இருப்​ப​தாக​வும் இதன் படப்​பிடிப்பு தற்​போது மும்​பை​யில் நடந்து வரு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது. புஷ்பா படங்​களுக்​குப் பிறகு அல்லு அர்ஜுனுடன் மீண்டும் நடிக்​கிறார் ராஷ்மி​கா. இதற்கிடையே, விஜய் தேவர​கொண்​டா​வும் ராஷ்மிகா​வும் இந்த மாதம் 26-ந்தேதி திரு​மணம் செய்​து​கொள்ள இருப்பதாகச் செய்​தி​கள் வெளியாகியுள்ளன.

atlee direction in rashmika action character
atlee direction in rashmika action character