Asha Sharath Video : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Asha Sharath

பாபநாசம் பட நடிகை வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அவரை வெளுவெளுவென வெளுத்தெடுத்து வருகின்றனர்.

Asha Sharath Video : தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபநாசம், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் ஆஷா சரத். இவர் தூங்காவனம் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது இவர் புதிய படம் ஒன்றில் கணவரை தொலைத்து விட்டு அவரை தேடி பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் இவர் படத்தின் ப்ரோமோஷனுக்காக கணவரை காணவில்லை என வீடியோ வெளியிட்டு இருந்தார்.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

இதனை பார்த்த ரசிகர்கள் உண்மை என நம்பி அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர், அதன் பின்னர் ரசிகர்களுக்கு அது ப்ரோமோஷன் நிகழ்ச்சி என்பது தெரிய வந்தது.

இதனால் ஆவேசமடைந்த ரசிகர்கள் படத்தின் ப்ரோமோஷனுக்காக இப்படியா கீழ்த்தரமாக நடந்துபீங்க? இதெல்லாம் சரியில்ல. உங்க திறமையை படத்தில் காட்டுங்க, இப்படி ப்ரோமோஷன் தேடாதீங்க என விமர்சனம் செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.