Aruva Movie Dropped Issue

சூர்யாவின் அடுத்த அடுத்த படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் அதிர்ச்சிக்குரிய தகவல் வைரலாகி வருகிறது.

Aruva Movie Dropped Issue : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரரைப்போற்று படத்திற்காக சூர்யா ஹரி இயக்கத்தில் அருவா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதையில் நடிக்க உள்ளதாகவும் அதனால் அவர் ஹரியின் அருவா படம் தற்போது வேண்டாமென முடிவெடுத்துள்ளதாகவும் இதனால் ஹரி செம கடுப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.