ரஜினி கமலுக்கு வில்லனாக நடிக்க நான் ரெடி என மேடையில் ஓபனாக பேசினார் பிரபல நடிகர் அருண் விஜய்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். என்னதான் வாரிசு நடிகராக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய நடிப்பாற்றலால் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

ரஜினி கமலுக்கு வில்லனாக நடிக்க நான் ரெடி.. மேடையில் ஓபனாக பேசிய பிரபல நடிகர்.!!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடிக்க வேண்டும் என போராடி வந்த இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு அருண் விஜய்யின் மார்க்கெட் சூடு பிடிக்கத் தொடங்கியது.

இதனையடுத்து தொடர்ந்து நல்ல நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் அடுத்ததாக யானை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் கலந்த படமாக வெளியாகிறது.

இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருண்விஜய் வாய்ப்பு கிடைத்தால் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு வில்லனாக நடிக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ரஜினி கமலுக்கு வில்லனாக நடிக்க நான் ரெடி.. மேடையில் ஓபனாக பேசிய பிரபல நடிகர்.!!

அஜித் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய காரணத்தினால் இவருக்கு ரஜினி கமலுக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முயற்சிகளிலும் அருண் விதை ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.