தம்பி ராமையா மகனுடன் மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். குறிப்பாக தற்பொழுது விஜயுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அர்ஜுன் மகன் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாக்கும் திருமணம் நடக்கப் போவதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

நடிகர் அர்ஜுன் தம்பி ராமையா மகனுக்கு மகளை திருமணம் செய்து வைக்க சம்மதம் சொன்னதற்கான காரணம் என்ன என்பதை தெரியவந்துள்ளது. அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

அப்போது அவருடைய பழக்க வழக்கம், நடவடிக்கைகளும் அர்ஜுனுக்கு பிடித்து போனதாலேயே இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.