“கனிமா”பாடலுக்கு மகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய ஏ.ஆர் முருகதாஸ்..!
கனிமா பாடலுக்கு மகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர் முருகதாஸ் இவர் தமிழில் தீனா, ரமணா, கத்தி, துப்பாக்கி போன்ற பல்வேறு படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராசி என்ற படத்தை இயக்கி வருகிறார் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் விக்ராந்த்,டான்சிங் ரோஸ் சபீர், ருக்மினி வசந்த் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தத் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் யார் முருகதாஸ் அவர்களின் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் குடும்பமாக சேர்ந்து “கனிமா” பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ARMurugadoss & his Family Dancing for 'Kanimaa' song🤩
So cute 😁♥️pic.twitter.com/CEK3Xuf7ze— AmuthaBharathi (@CinemaWithAB) June 16, 2025