விஜய் டிவியில் மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளார் நடிகை அனிதா சம்பத்.

தமிழ் சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். மேலும் இவர் தளபதி விஜயின் திரைப்படங்கள் உட்பட சில படங்களில் செய்தி வாசிப்பாளராகவும் நடித்துள்ளார்.

அதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்ட இவர் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டில் வென்றார்.

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் ஒன் சீரியலில் சிறப்பு வேடத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் வெற்றி கொடுக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. ‌‌

நிச்சயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள தமிழ் முயற்சி தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு என்ற நிகழ்ச்சியாக தான் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.