
‘விடாமுயற்சி’ படம் பார்த்துவிட்டு, ரெஜினாவுக்கு அனிருத் “உம்மா” கொடுத்தாரா?
சர்ச்சைகள் பல வடிவங்களில் வரும் என்பது தெரிந்ததே. அவ்வகையில் அனிருத்துக்கு வந்த நிகழ்வு பார்ப்போம்..
தமிழ் சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராக உருவாகி இருக்கிறார் அனிருத். இந்நிலையில், இவரைப் பற்றிய சர்ச்சைகளும் தொடர்கிறது.
குறிப்பாக நடிகை ஆண்ட்ரியாவை அவர் காதலித்தபோது இருவரும் லிப்லாக் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையானது.
அதனைத் தொடர்ந்து, சிம்புவுடன் சேர்ந்து ‘பீப் சாங்’ பாடலுக்கு இசையமைத்து சர்ச்சையில் சிக்கினார். தற்போது எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் பிஸியான மியூசிக் டைரக்டராக வலம் வருகிறார்.
அனிருத் கைவம் தற்போது தமிழில் அஜித்தின் விடாமுயற்சி, விஜய் நடிக்கும் ஜனநாயகன், ரஜினிகாந்தின் கூலி, கமலின் இந்தியன் 3 உள்பட அரை டஜன் படங்கள் உள்ளன.
இதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் ஷாருக்கான் நடிக்க உள்ள புதிய படத்திற்கு இசையமைக்க உள்ளார். மேலும் தெலுங்கில் நானி, விஜய் தேவரகொண்டா ஆகியோரின் படங்களில் கமிட்டாகி இருக்கிறார். மேலும், வெவ்வேறு நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.
இச்சூழலில், இவர் இசையமைக்கும் படங்களின் இறுதிக்கட்ட பணிகளை முடித்ததும் அப்படத்தை பார்த்து, அதற்கான விமர்சனத்தையும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அவ்வகையில் தற்போது அஜித்தின் விடாமுயற்சி படம் பார்த்த பின்னர் அனிருத் போட்டதாக குறிப்பிட்டு ஒரு ட்வீட் வைரலானது. அந்த ட்வீட்டுக்கு கீழ் விடாமுயற்சி பட நடிகை ரெஜினா கமெண்ட் செய்திருக்க, அவருக்கு ‘உம்மா’ என ரிப்ளையும் கொடுக்கப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்த ரசிகர்கள் அனிருத் தான் ரெஜினாவுக்கு உம்மா கொடுத்ததாக கருதி அந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைரலாக்கினர். ஆனால், உண்மையில் அது அனிருத் பெயரில் இயங்கி வரும் போலி எக்ஸ் தள கணக்கில் இருந்து போடப்பட்ட பதிவாகும்.
அனிருத் இதுவரை விடாமுயற்சி பற்றி எந்த ஒரு ட்வீட்டையும் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.