சினிமாவில் வேலை நேரம்: தீபிகா படுகோன் கருத்துக்கு ராஷ்மிகா ஆதரவு..
ஒவ்வொரு துறையிலும் வேலைநேரம் என்பது வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், சினிமா துறையில் வேலை நேரம் என்பது தற்போது பேசுபொருளாகி வருகிறது. பாலிவுட்டில் தீபிகா படுகோன் ‘கல்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருந்தார். எட்டு மணி வேலை நேரம் மற்றும் சம்பளம் காரணமாக அப்படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. தற்போதுதான் அவருக்குப் பதில் ஆலியா பட் இணைந்துள்ளார். தற்போது வேலை நேரம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா தெரிவிக்கையில், ‘தனக்கும் வேலை நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும்’ என கூறியுள்ளார். ராஷ்மிகா நடித்த […]