Browsing tag

story

‘த மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் கதை என்ன தெரியுமா?

நகைச்சுவைப் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பது தெரிந்ததே. அதன் பாதையில் உருவாகவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. பி.ஜே.கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர்சிங் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’. காமெடி கலந்த ஃபேமிலி படமாக இப்படம் உருவாகிறது. இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் அஹ்மத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். ‘பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற […]

அருள்நிதி நடிக்கும் ‘அருள்வான்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

அருள்நிதி நடித்துள்ள ‘அருள்வான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘தேன்’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கணேஷ் விநாயக். அடுத்ததாக புதிய படமொன்றை இயக்கி வந்தார். இதன் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. ‘அருள்வான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். […]

‘மரகத நாணயம்-2’ படத்தின் அப்டேட்ஸ்..

ஒரு திரைப்படம் வெற்றிபெற்று, ரசிகர்களை ஈர்க்கும் நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது. அவ்வகையில் மரகத நாணயம் படம் பற்றிப் பார்ப்போம்.. ‘மரகத நாணயம் 2’ படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மரகத நாணயம்’. இதன் 2-ம் பாகத்தின் பேச்சுவார்த்தை நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்தும் முடிவாகி ‘மரகத நாணயம் 2’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக வீடியோவினை லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் […]

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூர்யா?

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் அடுத்த பட ஹீரோ யார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், வெங்கி அட்லூரி இயக்கும் படம் மற்றும் ஆவேஷம் பட இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஒரு படம் என சூர்யா நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து தற்போது தேசிய விருது வென்ற ஒரு இயக்குநரிடம் சூர்யா கதை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. […]

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் நாளை ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு..

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் தயாராகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை 14-ந்தேதி வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவும் தொடக்கியுள்ளது. இது குறித்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘சினிமா என்பது திரையில் காட்டப்படும் கதைகளை விட மேலானது; அது இதயத் துடிப்பை பகிர்வது. குறிப்பாக பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில், பார்வையாளர்களும், கலைஞர்களும், திரையுலகப் படைப்பாளிகளும் ஒன்றிணையும் ஒரு திருவிழா அது. அப்போது குடும்பங்கள் […]

நாளை ‘பராசக்தி’ ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு..

ஜனநாயகன் படத்திற்கு நேர்ந்த ரிலீஸ் விவகாரம்போல, பராசக்தி படத்திற்கு வந்துவிடுமோ என எண்ணப்பட்டது. இந்நிலையில் இப்படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படத்தை, டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி அறிவுறுத்தினர். 1960-களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி ‘பராசக்தி’ […]

‘ஜனநாயகன்’ படம் 9-ந்தேதி ரிலீஸாகுமா?: ஐகோர்ட் தீர்ப்பு என்ன?

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். தணிக்கை வாரியத்தின் சார்பில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேஷனும், படக்குழு சார்பில் சதிஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். […]

படப்பிடிப்பு தளத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நேர்ந்த எதிர்பாராத விபத்து..

தமிழ் சினிமாவில் வாலி, குஷி, நியூ, இசை ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த எஸ்.ஜே.சூர்யா தற்போது கில்லர் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2, ஜெயிலர் 2 உள்பட பல படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இயக்கும் படம் கில்லர். இப்படத்தில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் கனவுப் […]

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் எப்போது?: கவுதம் மேனன் விளக்கம்..

விக்ரம் நடிப்பில. உருவான ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் தனது அடுத்த படம் குறித்து இயக்குநர் கவுதம் மேனன் கூறியதாவது: ‘அடுத்ததாக ஒரு காதல் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட எழுதி முடித்துவிட்டேன் எனலாம். அதனைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறேன். ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மீதான பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அறிவிப்பு வரும். கன்னடத்தை தவிர இதர மொழிகள் அனைத்திலும் பணிபுரிந்துவிட்டேன். இப்போது கன்னடத்தில் ஒரு பெரிய ஸ்டாருக்கு ஒரு ஐடியா கூறியிருக்கிறேன். அவருக்கும் பிடித்திருக்கிறது. […]

ஜனநாயகனை முறியடித்து பராசக்தி புதிய சாதனை..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பராசக்தி படம் வருகிற 10-ந்தேதி வெளியாகிறது. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டு வைரலாகி வருகிறது. அதாவது வெளியான 24 மணி நேரத்தில் ‘பராசக்தி’ ட்ரெய்லர் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன் […]