Browsing tag

story

உளமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: ரன்வீர்சிங் பதிவு..

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ‘காந்தாரா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பூத கோலா வழிபாட்டு முறையை ரன்வீர் சிங் நடித்துக் காட்டினார். மேலும், அந்தத் தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் செயல் துளு நாடு மக்களின் மத உணர்வுகளைப் […]

‘அகண்டா-2’ படம் இந்திய அளவில் சாதனை படைக்கும்: இயக்குநர் நம்பிக்கை..

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. சில காரணங்களால், தற்போது பாலகிருஷ்ணாவுக்கு பதிலாக விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இதற்கிடையில், பாலகிருஷ்ணா நடிப்பில் போயபட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள ‘அகண்டா-2’ படம் வெளியாகவுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி, ஹர்ஷாலி மல்ஹோத்ர கபிர் துஹார் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 5-ந்தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ‘அகண்டா-2’ படம் குறித்து இயக்குநர் போயபட்டி ஸ்ரீனு தெரிவிக்கையில், […]

சுந்தர்.சி-விஷால் இணையும் புதிய படத்தின் அப்டேட்ஸ்..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருந்த ‘தலைவர்-173’ படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிய சுந்தர்.சி தனது அடுத்த படப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில், சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே, தனது அடுத்த படத்தினை உடனடியாக தொடங்க சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறார். ஏசிஎஸ் நிறுவனம் மற்றும் விஷால் இணைந்து தயாரிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் […]

தனுஷ்-ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தின் அப்டேட்ஸ்..

தனுஷ் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க மே’ படம் தற்போது வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. விக்னேஷ் ராஜா படத்தை முடித்துவிட்டு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ். இப்படத்தினை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படப்பூஜையும் முடித்து, அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில், மம்முட்டி […]

ரஜினியின் ‘தலைவர்-173’ பட இயக்குநர்? ராம்குமாரின் வைரல் பேச்சு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கும் மாபெரும் வாய்ப்பை இளம் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பெற்றிருப்பதாக தெரிகிறது. இவர்தான் ‘தலைவர்-173’ திரைப்படத்தின் இயக்குநர் என கூறப்படுகிறது. ‘பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கி, வெற்றிப்படமாக கொடுத்து, தேசிய விருதையும் வென்றுள்ளார் ராம்குமார் பாலகிருஷ்ணன். அதனைத்தொடர்ந்து சிம்பு நடிப்பில் STR-49 திரைப்படத்திற்கு பூஜை நடைபெற்று, இயக்குவதற்கான பணிகளில் இருந்த ராம்குமாருக்கு ரஜினியிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினிக்கு ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை பிடித்துப்போகவே ‘தலைவர்-173’ பட இயக்குநர் […]

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு இயக்கும் படங்களின் அப்டேட்ஸ்..

‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து எஸ்கே நடிக்கவுள்ள படங்களின் தகவல்கள் பார்ப்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனைத்தொடர்ந்து எஸ்கே 24-வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது சிபி சக்கரவர்த்தி இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகளை கவனித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்த்த நிலையில், அதில் சில சிக்கல்களும் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது SK24 திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனத்திற்கு திடீரென […]

ரஜினி பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து, ரஜினி பலரிடம் கதை கேட்டு வந்தார். கடைசியாக ‘மகாராஜா’ பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன் மற்றும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறிய கதைகள் ரஜினிக்கு பிடித்திருந்த்து. இதில், ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதையை தற்போது ரஜினி தேர்வு செய்திருக்கின்றார். இந்நிலையில், இது பற்றிய அறிவிப்பை தனது பிறந்தநாளில் வெளியிடலாம் என்ற முடிவிற்கு ரஜினி வந்திருப்பதாக கூறப்படுகிறது. அன்று ‘ஜெயிலர்-2’ படத்தின் […]

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

சூர்யா நடித்து வரும் படங்களின் தகவல்கள் காண்போம்.. சூர்யா தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ ரிலீஸ் தேதி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், வெங்கி அட்லுரி இயக்கும் படத்தின் வெளியீடு பற்றி அப்டேட் கிடைத்துள்ளது. அவ்வகையில், வரும் மே மாதம் படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரிலீஸ் தேதியானது சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படத்துடன் கிராஸ் […]

ரஜினி நடிக்கும் ‘தலைவர்-173’ படத்தின் இயக்குநர்…

ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ள ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. தொடர்ந்து, கதை கேட்கும் பணிகளில் ரஜினி ஈடுபட்டுள்ளார். இளம் இயக்குநர்கள் அவரை சந்தித்துக் கதை சொல்லி வருவதாக கூறப்படுகிறது. ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகலுக்கு பிறகு, ரஜினியிடம் ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் நித்திலன் கதை சொல்லியுள்ளார். மேலும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறிய கதையில் ரஜினி இம்ப்ரஸ் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ‘தலைவர் 173’ படத்தை ராம்குமார் […]

‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் வசூல்: படக்குழுவினர் மகிழ்ச்சி..

பான் இந்தியா அளவில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மத்தியில், சில சமயம் சிறு பட்ஜெட் படங்கள் வரவேற்பு பெற்று விடுகின்றன. முன்னணி நடிகர்களின் படங்களைவிட, புதுமுக நடிகர்களின் படங்கள் வெற்றி பெறுகின்றன. கதைதான் ரசிகர்களை ஈர்க்கிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், ரியோ ராஜ் நடித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம், வெளியான தினத்தில் இருந்து நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது இப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ளது. ரியோ ராஜ் நடிப்பில் […]