Browsing tag

Rajinikanth

‘நம்பர் கேம்’ ஒரு போதும் என் தந்தையை பாதிக்காது: ஸ்ருதிஹாசன் விளக்கம்..

சினிமாவில் எதிர்பாராது நிகழும் வெற்றி-தோல்விக்களில் கமலின் மனநிலை என்ன? என்பது குறித்து ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். ‘நாயகன்’ படத்துக்கு பிறகு, இருபெரும் ஜாம்பவான்களான கமல், மணிரத்னம் இருவரும் இணைந்து எடுக்கப்பட்ட படம் ‘தக் லைஃப்’ பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி, அசோக் செல்வன் உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படம், எதிர்பாராத தோல்வியை தழுவியது. இந்நிலையில், கடந்த வாரம் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம் […]

ஹீரோவாக நடிக்கும் தனது 100-வது படம் குறித்து, நாகார்ஜூனா அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில், தேவா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியும், சைமன் என்ற நெகட்டிவ் ரோலில் நாகார்ஜூனாவும் மிரட்டியுள்ளனர். இந்நிலையில், நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பு ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா.கார்த்திக் வசம் வந்துள்ளது. அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்த படம், ‘நித்தம் […]

ரஜினியின் ‘தர்பார்’ சல்மான்கானின் ‘சிக்கந்தர்’ தோல்விக்கு காரணம்: ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்..

ரஜினி நடித்த ‘தர்பார்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேபோல் ‘சிக்கந்தர்’ படமும் ஆனது. இவ்விரு படங்களையும் இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘தர்பார்’ பட தோல்விக்கு, மிக சீக்கிரமாக கதை எழுதியதும் காரணமாகி விட்டது என்றார். பின்னர் இவரது இயக்கத்தில், சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ வெளியானது. இதில் ராஷ்மிகா மந்தனா , பிரதீக் பப்பர், சத்யராஜ் என பலர் நடித்தனர். பிரம்மாண்ட ஆகசன் படமான இது வெற்றி பெறவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தின் தோல்வி குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் […]

ரஜினி கமல் இணைந்து நடிக்கப் போகிறார்களா? இயக்குனர் யார் தெரியுமா?

ரஜினி கமல் இணைந்து படம் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இவர்கள் தமிழ் சினிமாவில் இரண்டு தூண்கள் என்று சொல்லலாம். சில நாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் 46 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமல் இரண்டு பேரும் இணைந்து நடிக்கப் போவதாக […]

ரஜினியுடன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. விடுமுறை நாளான நேற்று ‘கூலி’ படம் இந்தியாவில் ரூ.34 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தமிழ் மூலம் அதிகபட்சமாக ரூ. 22.5 கோடி கிடைத்திருக்கிறது. தெலுங்கு மூலம் ரூ. 6.5 கோடியும், இந்தி மூலம் ரூ. 4.65 கோடியும், கன்னடம் மூலம் ரூ. 35 லட்சமும் கிடைத்திருக்கிறது. […]

‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து நாகார்ஜூனா பேச்சு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தில் சைமன் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா, ரஜினியுடன் நடித்தது குறித்து கூறும்போது, ‘நானும் ரஜினியும் திரையில் சந்திக்கும்போது, ஒரு காந்த சக்தி இருப்பதை ரசிகர்கள் உணர்கிறார்கள். சிறப்பான படத்தின் ஒரு பகுதியாக […]

எதிர்மறை விமர்சனங்களால் ‘கூலி’ பட வசூலில் பாதிப்பா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்துக்கு எதிர்மறை விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. இதனைத் தாண்டி அனைத்து மாநிலங்களிலும் இப்படம் வசூல் செய்து வருகிறது. இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனிடையே, எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, ‘எதிர்மறை விமர்சனம் சொன்னால் நமக்கு விளம்பரம் கிடைக்கும் என்று பல பேர் சமூக வலைதளத்தில் இருக்கிறார்கள். […]