Browsing tag

love

கீர்த்தி சுரேஷின் செல் நம்பரை கேட்ட பிரபல நடிகர்கள்; வருண் தவான் மறுப்பு

‘பேபி ஜான்’ பட ஹீரோ வருணிடம் நடிகை கீர்த்தி சுரேஷின் செல் நம்பரை, கேட்ட நடிகர்கள் பற்றி பார்ப்போம்.. தளபதி விஜய், சமந்தா நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தை இந்தியில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் அட்லி தயாரிக்க, காளீஸ் இயக்கி படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ரிலீஸாகி தற்போது நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘பேபி ஜான்’ பட ரிலீஸுக்கு […]

ஹனிமூனில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகை ரம்யா பாண்டியன்: இன்ஸ்டா போட்டோஸ்..

காதல் கணவருடன் தேனிலவில் பிஸியாய் இருக்கும் ரம்யா, தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார். இது குறித்த நிகழ்வுகள் வருமாறு: ‘டம்மி டப்பாசு’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரம்யா பாண்டியன், ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படம் மூலம் கவனம் ஈர்த்தார். இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது அவரின் மொட்டை மாடி போட்டோஷூட் தான். அந்த போட்டோஷூட்டால் ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார் ரம்யா. விஜய் டிவி.யில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் […]

செல்வராகவன், ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் ‘மெண்டல் மனதில்’ ஷூட்டிங் அப்டேட்…

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற வித்தியாசமான காதல் படங்களை இயக்கி முத்திரை பதித்தவர் செல்வராகவன். இவர், தற்போது நடிகராகவும் பவனி வருகிறார். தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ படத்திற்கு பிறகு, நீண்ட இடைவெளியில், இப்போது ‘மெண்டல் மனதில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பூஜையுடன் சூட்டிங் துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. காதலை மையமாக கொண்டு, இந்தப் படத்தின் கதைக்களத்தை செல்வராகவன் உருவாக்கியுள்ளார். இப்படத்தில், ‘காதலை […]

விவாகரத்து வழக்கில், ஜெயம்ரவி- ஆர்த்தி இருவரும் இன்று ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை..

ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் நேரில் சந்தித்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய பின்னர், நீதிபதி வழங்கிய உத்தரவு வருமாறு: நடிகர் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் காதலித்து கல்யாணம் செய்து 15 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணத்தால், தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, ஜெயம் ரவி, தனது வலைத்தளத்தில், மனைவியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இதற்கு ஆர்த்தி, ‘இந்த விவாகரத்து முடிவை ஜெயம் ரவி எனது ஒப்புதல் இல்லாமல் […]

சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா மீண்டும் நடிப்பாரா?: கார்த்திக் சுப்பராஜிக்கு கோரிக்கை..

ஒருத்தன், ஆளே கலர்ஃபுல்லா மாறிட்டு வர்றான்னா.. அவனுக்குள்ள காதல் நுழைஞ்சிட்டு இருக்குன்னு அர்த்தம்’ அதாவது, விஷயம் என்னன்னா சூர்யா-44 படம் இப்டி.. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘கங்குவா’ படத்தை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘சூர்யா 44’. இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் திரையில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என்றதும், இப்படம் கேங்ஸ்டர் அல்லது ஆக்சன் படமாக இருக்கும் என நினைத்தார்கள். படத்தின் கிலிம்ப்ஸ் […]

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பட பாடல், நாளை வெளியீடு..

தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் 3-வது சிங்கிள் பாடல் நாளை டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. இது பற்றிய விவரம் வருமாறு: ‘பவர் பாண்டி’, ‘ராயன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள புதிய படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட […]

எனக்கு திருமணம் ஆகிவிட்டது: நடிகை டாப்ஸி ஓபன் டாக்

‘வெள்ளாவி வெச்சுதான் வெளுத்தாங்களா? வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா?’ என்ற ‘ஆடுகளம்’ படத்தில் வரும் வரிகளுக்கு பொருத்தமானவர்தான் நடிகை டாப்ஸி. இவர் திடீரென தற்போது, ‘எனக்கு கடந்த ஆண்டே திருமணம் ஆகிவிட்டது’ என கூறியுள்ளார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. நடிகை டாப்ஸி தனது தனிப்பட்ட வாழ்க்கை, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் சொல்லமாட்டார். பொதுஇடங்களில் புகைப்படங்களுக்கும் போஸ் கொடுப்பதில்லை. இத்தகைய கொள்கையோடு இவர், தனது காதலர் மத்யாஸ் போ என்பவரை டாப்ஸி திருமணம் செய்து […]

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், தனது காதலியை இன்று மணந்தார்

நடிகர் காளிதாஸுக்கும் ஜமீன் வாரிசான தாரிணிக்கும், இன்று திருமணம் இனிதாக நடைபெற்றது. இது குறித்த காதல் கல்யாண தகவல் பார்ப்போம். திரையுலகில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸும் தன் தந்தையை போலவே, மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் நடித்து வருகிறார். அண்மையில், தனுஷின் 50-வது படமான ராயனில், தனுஷ் தம்பியாக நடித்திருந்தார் காளிதாஸ். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றது. இது தவிர, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பாவக் கதைகள்’ என்கிற ஆந்தலஜி படத்தில் திருநங்கையாக மாறுபட்ட […]

கீர்த்திகா உதயநிதி இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’ படம் அப்டேட்

‘வணக்கம் சென்னை’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் கீர்த்திகா உதயநிதி. தற்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இத்திரைப்படத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடிக்க நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. இப்படம் ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகியிருக்கிறது. முன்னதாக கீர்த்திகா உதயநிதி தெரிவிக்கையில், நேற்றைய-இன்றைய-நாளைய காதலின் மாற்றங்களை உணர்வுபூர்வமாய் படம் பேசும்’ […]

எங்கள் பதினைந்து வருட காதலுக்கு, அந்த சூரியனே சாட்சி: கீர்த்தி சுரேஷ் பதிவு

‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பது போல, நடிகை கீர்த்தியின் காதலும் பெரிதாகவே இருக்கிறது. ஆம், இது குறித்து அவரே வெளியிட்ட பதிவை பார்ப்போம்.. 32 வயதாகும் கீர்த்தி சுரேஷ், தனது பள்ளிக்காலத்து நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து, பின்னர் அவரையே திருமணமும் செய்து கொள்ள இருப்பதாக வலைதள தகவல்கள் தொடர்கின்றன. ஆண்டனி தட்டில் என்பவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர். ஆனால், சொந்த ஊர் கேரளா. இவருக்கு கேரளா மற்றும் துபாயில் கோடிக்கணத்தில் சொத்துக்கள் உள்ளதாக […]