Browsing tag

director rajamouli

புதிய ஆஸ்கர் விருது அறிமுகம்: இயக்குனர் ராஜமவுலி வரவேற்பு

ஆஸ்கர் விருது வழங்குதலில், புதிய பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த எனர்ஜி நியூஸ் பார்ப்போம்.. 100-வது ஆஸ்கர் விழா 2028-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுகளை வழங்கும் ‘அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்’ நிர்வாகக் குழு, ஸ்டண்ட் டிசைனை போற்றும் வகையில், சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான புதிய ஆஸ்கர் பிரிவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த விழாவில் இருந்து சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்கு […]

ராஜமவுலி-மகேஷ்பாபு படத்தின் ஷுட்டிங் அப்டேட்

ராஜமவுலி தற்போது இயக்கும் படத்தின் அப்டேட் பார்ப்போம்.. பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படங்களை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் பிரம்மாண்ட படம் தயாராகி வருகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவுமின்றி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தினை ஒரு பாகமாக மட்டுமே எடுக்க முடிவு செய்திருக்கிறார் ராஜமவுலி. ஏனெனில், பலரும் இரண்டு பாகங்களாக உருவாக்கி வருவதால், அதில் நாமும் இணைய வேண்டாம் என முடிவெடுத்துள்ளார். முன்னதாக ‘பாகுபலி’ படத்தின் மூலம் இரண்டு பாகங்கள் […]

ராஜமௌலி-மகேஷ்பாபு பட சீன் லீக் ஆனது எப்படி?: படக்குழு டென்ஷன், ஃபேன்ஸ் ஹேப்பி

ராஜமௌலி எடுக்கும் படத்தின் சீன் லீக் ஆகியுள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. மகேஷ் பாபு, ராஜமௌலி கூட்டணியில் பிரம்மாண்ட ஆக்‌ஷன் மூவி உருவாகிறது. தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் மலையாள நடிகர் ப்ரித்விராஜ் வில்லனாக நடிக்க, பிரியங்கா சோப்ரா முக்கியமான ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இருந்து வீடியோ லீக் ஆகியுள்ளது. அதாவது, ஒரு காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்ட இந்த காட்சியில் ஒருத்தர் வீல் சேரில் அமர்ந்திருக்கிறார். சில பிரைவேட் செக்யூரிட்டிஸ் மகேஷ் […]

‘காடுகளின் பின்னணியில்’ ராஜமௌலியின் அடுத்த திரைப்படம்: பயிற்சியில் மகேஷ்பாபு

இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜமௌலி. ‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களுக்கு பிறகு இவர் அடுத்த படத்துக்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தின் பணிகளை கடந்த சில மாதங்களாக கவனித்து வருகிறார் ராஜமவுலி. முழுக்க காடுகளை பின்புலமாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார். இதில் நாயகனாக மகேஷ் பாபு, நாயகியாக பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஹைதராபாத்தில் கதை விவரிப்பு, பயிற்சி உள்ளிட்ட பணிகள் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு உள்ளன. […]