Browsing tag

Dhruv Vikram

‘பைசன்’ படம்தான் எனது முதல் படம்: துருவ் விக்ரம் பெருமிதம்..

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ’பைசன்’ படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துருவ் விக்ரம் பேசும்போது, ‘என் பெயர் துருவ். இதுவரை 2 படங்கள் நடித்துள்ளேன். அந்த 2 படங்களை பார்க்கவில்லை என்றாலும் பிரச்சினையில்லை. இந்தப் படத்தை கண்டிப்பாக நீங்கள் பார்க்கவேண்டும், ஏனென்றால், இது தான் என் முதல் படம். ’பைசன்’ படத்தை அப்படித்தான் நான் பார்க்கிறேன், நீங்களும் அப்படித்தான் பார்ப்பீர்கள் என நம்புகிறேன். இப்படத்துக்காக அனுபமா, ராஜிஷா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே பயங்கரமாக […]

மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணி இருக்காரு.. பைசன் படம் குறித்து பேசிய துருவ் விக்ரம்..!

பைசன் படம் குறித்து துருவ் விக்ரம் மனம் திறந்து பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக பலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது துருவ் விக்ரம் வைத்து பைசன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்தும் கதையின் ஹீரோவான துருவ் விக்ரம் பேசியுள்ளார். அதாவது பைசன் படத்தில் நான் என்னுடைய 100% சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறேன் என்றும் என் […]

மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம்..

கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு, மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ‘தக் லைஃப்’ படம் தோல்வியை தழுவியதால், தனது அடுத்த படத்தின் கதையை மெருக்கேற்றி வந்தார் மணிரத்னம். தற்போது நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்திருக்கிறார். காதல் கலந்த ஆக்‌ஷன் கதையாக இதனை உருவாக்கவுள்ளார் மணிரத்னம். இதில், துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கவுள்ளார். நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் பணிபுரியவுள்ளார். […]

துருவ் விக்ரம் நடிக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட் இதோ.!!

துருவ் விக்ரம் நடிக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக நடித்து வருபவர் சியான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம் இவர் தற்போது பைசன் என்ற படத்தில் நடித்துள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் புதிய […]

மாரி செல்வராஜின் ‘பைசன்’ படம் ரிலீசுக்கு முன்பே, செம கலெக்‌ஷன்..

‘வாழை’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘பைசன் காளமாடன்’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில், துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படமும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. படத்தில் கபடி வீரனாக நடித்துள்ளார் துருவ் விக்ரம். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். தற்போது ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை […]