அமீர் நடிக்கும் மாகாளி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்க, நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே திட்டமிட்டபடி முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்புக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாரி செல்வராஜின் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி. அரவிந்த் இப்படத்தை எழுதி இயக்குகிறார். சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வேலூர் மற்றும் இராணிப்பட்டி பகுதிகளில் நடைபெற்றது. […]