Browsing tag

actor vijay

விஜய் மீது எஸ்.வி.சேகர் மறைமுகமாய் தாக்கு..

ரூ.500 கோடி சம்பளம் வாங்கும் விஜய், தன்னுடைய மேனேஜருக்கு கொடுத்த சம்பளம் ரூ.10,000 என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமாருக்கு திரையுலகம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. விஜய்யின் முன்னாள் மேலாளராக இருந்த இவர் அண்மையில் திமுகவில் இணைந்துகொண்டார். இவர், திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய காலத்தில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தார். மேலும், கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக […]

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகனுக்கு, முதல்படமான ‘நாளைய தீர்ப்பு’..

விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து பலர் தங்களின் கருத்துகளை கூறியிருக்கும் நிலையில், தயாரிப்பாளர் ராஜன் கூறியதாவது, ‘விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்தது தான் பிரச்சினை. அவர் சினிமாவிலேயே இருந்திருந்தால் ஜனநாயகன் படத்திற்கு இப்படி ஒரு கொடுமை நடந்திருக்காது. அவர் அரசியலில் குதித்தது, அதுவும் அவர் யாருடனும் கூட்டணி அமைக்காமல் இருப்பது தான் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம். […]

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்.. கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ‘புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் […]

விஜய் செய்ததை தியாகமாக பார்க்கிறேன்: தம்பி ராமையா பேச்சு..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் வழக்கில் வருகிற 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனை படக்குழுவும் ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், திரைப் பிரபலங்கள் அனைவரும் தளபதி விஜய்க்கு ஆதரவாக தங்களின் குரலை எழுப்பி வருகின்றனர். ‘ஜனநாயகன்’ எப்போது வெளியாகின்றதோ அன்றுதான் பண்டிகை எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். இச்சூழலில், விஜய் குறித்து, தம்பி ராமையா பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அவர் தெரிவிக்கையில், ‘விஜய் செய்ததை நான் தியாகம் என்று தான் சொல்வேன். […]

விஜய் விரும்பிய சின்னமே ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஆக்கப்பூர்வமான தீர்ப்பை விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் விஜய்யின் தவெக கட்சிக்கு ஒதுக்கப்படும் சின்னம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில், சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், அக்கட்சிக்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் 234 […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் வழக்கில் வரும் 27-ந்தேதி தீர்ப்பு..

விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை, ஜனவரி 9-ந்தேதி வெளியிடத் தயாரிப்புக் குழு திட்டமிட்டது. எனினும், மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்து மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதால், சிக்கல் ஏற்பட்டது. இதை எதிர்த்துப் படத் தயாரிப்புக் குழு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜனவரி 9-ஆம் தேதி, தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை […]

‘ஜனநாயகன்’ படத்திற்கு நேர்ந்த புது நெருக்கடி..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனம் நெருக்கடி கொடுப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை என்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனநாயகன் பட நிறுவனத்துக்கு அமேசான் வீடியோ தெரிவித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால், ஜனநாயகன் படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் வழக்கு: இன்றைய விசாரணை விவரம்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மேல்முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பில், சான்றிதழ் வழங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஜனவரி 6-ந்தேதியில் சென்சார் போர்டு தலைவர் பிறப்பித்த முடிவையும், தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். ஆனால், தயாரிப்பாளர் அந்த கோரிக்கையையே முன்வைக்கவில்லை. ஒரு படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்துள்ளது. படத்திற்கு சான்றிதழ் […]

விஜய்யின் ‘தெறி’ அஜித்தின் ‘மங்காத்தா’ ரீரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

பொங்கல் பண்டிகையில் விஜய்-அஜித் படங்கள் இல்லாத நிலையில் மாற்று ஏற்பாடாக இதோ ரசிகர்களுக்காக உற்சாக நிகழ்வு.. விஜய்யின் ‘தெறி’, அஜித்குமாரின் ‘மங்காத்தா’ திரைப்படங்கள், ரீ ரிலீஸில் மோதுகின்றன. விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்த படம், ‘தெறி’. அட்லி இயக்கி வெற்றி பெற்ற இப்படம் 2016-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். ‘ஜனநாயகன்’ வெளியாகாத நிலையில், பொங்கலை முன்னிட்டு இந்தப் படத்தை ஜனவரி 15-ந்தேதி மறு வெளியீடு செய்வதாக அறிவித்திருந்தார் கலைப்புலி எஸ்.தாணு. சில […]

சிபிஐ அலுவலகத்தில் இன்று விஜய்யிடம் 2-ம் கட்ட விசாரணை..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவிருந்த ஜனநாயகன் படம், ரிலீஸ் தொடர்பாக நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் 2-வது முறையாக விசாரணைக்கு ஆஜராவதற்காக நடிகரும் தவெக தலைவருமான விஜய்யிடம் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025 செப்டம்பர் 27-ந்தேதி விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். […]