Browsing tag

விஜய்

‘ஜனநாயகன்’ படம் பார்த்து தணிக்கை குழு நடவடிக்கை..

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தணிக்கைப் பணிகள் தொடங்கின. இதனைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் கூறியிருக்கிறார்கள். இதன் பணிகளை முடித்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பவுள்ளது படக்குழு. முக்கியமாக சண்டைக் காட்சிகளில் ரத்தம் தெறிப்பதை குறைக்கச் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பணிகள் இன்றுடன் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 31-ந்தேதி இரவு […]

‘ஜனநாயகன்’ படத்தின் கதை என்ன?: ஹெச்.வினோத் விளக்கம்..

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ என்ற படக்கதையை அடிப்படையாக வைத்து தமிழுக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவிக்கையில், ‘ஜனநாயகன்’ படத்தின் கடைசி 20 நிமிடங்களில், விஜய் சாருடைய பேர்வல் வீடியோ இருக்கிறது, அழ வைக்க போகிறோம் என சிலர் சொல்கிறார்கள். அதெல்லாம் எதுவும் இல்லை. படத்தின் […]

ஏஐ தொழில்நுட்பத்தால் விஜய்யின் புகைப்படங்கள், வைரல்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமன்றி விஜய்யின் நண்பர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழா தொடங்கப்பட்ட உடனே விழா அரங்கில் இருந்து பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் பகிரப்பட்டது. இந்த புகைப்படங்கள் வைரலாவதை முன்வைத்து, போலியாக ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படங்களும் வெளியானது. இதையும் பலர் உண்மை என நினைத்து பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். பின்பு, பலரும் இது ஏஐ […]

விஜய்க்கு, நாசர் விடுத்துள்ள அன்புக் கோரிக்கை..

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் உள்ளிட்ட படக்குழுவினருடன் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் என்பதால் பலரும் நெகிழ்ச்சியுடன் பேசினார்கள். இந்த விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும்போது, ‘அமைதியும், பணிவும் தவிர கூர்மையான ஆயுதம் வேறு எதுவுமில்லை. அதுவே உங்களின் அடையாளம். என் மகன் படுத்த படுக்கையாக இருந்தான். அவனை மீண்டும் நடக்க வைத்தவர் விஜய் தான். […]

விஜய் சினிமாவை விட்டு விலகுவது பற்றி, கருணாஸ் கருத்து..

விஜய்யின் ’ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. இது விஜய்யின் கடைசிப் படமாகும். அதன்பின் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இச்சூழலில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் மறைமுகமாக அரசியல் பேசினார். அவர் தெரிவிக்கையில், ‘என்னுடைய ரசிகர்கள் ஒருநாள், இரண்டு நாள் இல்லைங்க. கிட்டத்தட்ட […]

எனக்காக எல்லாத்தையும் விட்ட என் ரசிகர்களுக்காக.. நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜயின் அதிரடி பேச்சு..!!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அதிரடியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசுவார் அவரது குட்டி ஸ்டோரி என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் […]

நாளை ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: விஜய் மலேசியா பயணம்..

விஜய் தனது கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம், ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது. படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான ‘தளபதி கச்சேரி’ மற்றும் ‘ஒரு பேரே வரலாறு’ சிங்கிள்ஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் குரலில் ‘செல்ல மகளே’ பாடலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு […]

‘பராசக்தி’ படத்தில் சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன் எப்படி கமிட் ஆனார்?: சுதா கொங்கரா விளக்கம்..

‘சூரரைப் போற்று’ வெற்றிப் படத்தை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘பராசக்தி’. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜனவரி 10-ந்தேதி படம் வெளியாகவுள்ளது. முன்னதாக, இப்படம் முதலில் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் ‘புறநானூறு’ என்ற பெயரில் உருவாவதாக இருந்தது. அதில் சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ‘புறநானூறு’ படம் நடைபெறாமல் போனது ஏன்? சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன் எப்படி […]

இளம் ஹீரோக்களுக்கு வழி விடுங்க.. விஜய்,அஜித் குறித்த கேள்விக்கு நமிதாவின் நச் பதில்.!!

இளம் ஹீரோக்களுக்கு வழி விடுங்க என நமிதா நச் பதில் கொடுத்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற பல மொழிகளில் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நமீதா. இவர் தமிழில் ஏய் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து சாணக்யா, பம்பர கண்ணாலே, ஆணை, இங்கிலீஷ் காரன், கோவை பிரதர்ஸ், பச்சை குதிரை, நீ வேணுண்டா செல்லம், வியாபாரி, நான் அவன் இல்ல, அழகிய தமிழ் மகன், பில்லா, தி […]

ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ பட டீசர்: ரசிகர்கள் வரவேற்பு..

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் விஜய். இதற்கிடையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாவார் என பலரும் எதிர்பார்த்தனர். சில முன்னணி இயக்குநர்களும் அவரை வைத்து படம் இயக்குவதற்கான முயற்சிகளில் இறங்கினர். குறிப்பாக சுதா கொங்கரா, மலையாள சினிமா இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ஆகியோர் ஜேசன் சஞ்சயை சந்தித்து கதை சொன்னதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அவர், இயக்குநராக அறிமுகமாவதில் உறுதியாக இருந்தார். இதற்காக கனடா […]