Browsing tag

ரசிகர்கள்

நெல்சன் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிக்கும் நேரடி தமிழ்ப்படம் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணியில் இருக்கிறார். முன்னதாக, இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் மெகா வெற்றி பெற்றது. இந்நிலையில், படத்தின் 2-ம் பாகம் இன்னும் 10 நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படக்குழுவினர், புரொமோஷன் பணிகளை செய்து […]

விடாமுயற்சியா? குட் பேட் அக்லியா?: பொங்கலுக்கு ரிலீஸாகும் படம் எது? விவரம்..

அஜித் ரசிகர்களுக்கு ‘தல’ பொங்கல் வருவது கிட்டத்தட்ட உறுதியாக விட்டது. இனி, அமர்க்களம் தான், எப்படியென்றால்.. ‘தல’ அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், திரையுலகத்திற்கும் இருக்கும் ஒரு கேள்வி, அஜித் நடிப்பில் எந்த படம் முதலில் ரிலீசாகும் என்பதே. ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை முதலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாம் என படக்குழு நினைத்தது. ஆனால், அது முடியவில்லை. எனவே, டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்ட நிலையில், தற்போது அதற்கும் சாத்தியமில்லை. இதைத்தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை […]

37 விநாடி என்பது நயன்தாராவுக்கு 3 விநாடி மாதிரியா?: இணையதள கேள்விகள்..

37 விநாடி என்பது நயன்தாராவுக்கு 3 விநாடி மாதிரியா? என இணையவாசிகளின் கேள்வி வைரலாகி வருகிறது. இது குறித்து பார்ப்போம்.. நயன்தாராவின் திருமண ஆவணப்படமான ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ படத்தின் காப்புரிமைப் பிரச்சினையால் சர்ச்சையை எதிர்கொண்டது தெரிந்ததே. ‘நானும் ரவுடி தான்’ படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளரான தனுஷ் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்ததால், தனது ஆவணப்பட வெளியாக தாமதமானதாக நயன்தாரா குற்றம்சாட்டி இருந்தார். மேலும், ஆவணப்படத்தில் இருந்த வெறும் 3 விநாடி காட்சிகளுக்கு தனுஷ் […]

இன்று நயன்தாரா பிறந்த நாளில் சமந்தாவின் விளம்பரப் படம் வைரல்

நயன்தாராவின் பிறந்த நாளான இன்று, சமந்தாவின் பழைய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த அழகிய நிகழ்வு பற்றி காண்போம். நயன்தாராவின் பிறந்த நாளான இன்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் எப்படி இருக்கிறது என வலைதளங்களில் பேசுகிறார்கள். இந்த நாளில் யாரும் எதிர்பாராத விதமாக சமந்தாவின் பழைய வீடியோ ஒன்றும் வைரலாகியுள்ளது. விளம்பரப் படத்தில் நடித்த சமந்தாவை பார்த்த அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். அந்த விளம்பர […]

ஓவர் ஃபில்டப் கூடவே கூடாது: கார்த்திக் சுப்புராஜிடம் நடிகர் சூர்யா கருத்து

அனுபவம் கற்றுத் தரும் பாடம் தான், அடுத்து நிகழ்வதை சரியாக்கும். இப்ப எதுக்கு இந்த கருத்துன்னா, நடிகர் சூர்யா பெற்ற அனுபவம் தான். வாங்க விஷயத்திற்கு போவோம்.. தமிழ்த்திரையில் முதல் முறையாக பான் இந்திய படமாக உருவானபடம் என்ற பெருமையை கங்குவா பெற்றது. எனவே தமிழ் சினிமாவிற்கே கங்குவா பெருமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக அமைந்துவிட்டது தெரிந்ததே. இப்படத்தின் வசூல் நன்றாக இருந்தாலும், போகப் போக குறைய துவங்கிவிட்டது. அதற்கு இப்படத்தின் மீதான […]

நடிகை ஜோதிகாவின் பதிவுக்கு, மீம்களை உருவாக்கி இணையவாசிகள் கிண்டல்

பான் இந்தியா படமாக சூர்யா நடித்த கங்குவாவை பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர், எதிர்மறையான கருத்துகளே தெரிவித்தனர். இந்நிலையில், படம் குறித்து நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனது கருத்தினைத் தெரிவித்தார். அதற்கு பல இணையவாசிகள் மீம்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த இணைதள கலாட்டா என்னவென்றால்.. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் முழுவதும் கத்திக் கொண்டே உள்ளார்கள் என்றும், படத்தின் பின்னணி இசை தெளிவாகவே இல்லை என்றும், முழுக்க முழுக்க இரைச்சலாக இருப்பதாகவும் தெரிவித்து […]

நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவு: ரசிகர்கள் வரவேற்பு..

நடிகர் சூர்யா தற்போது எடுத்துள்ள முடிவுக்கு, ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் லைக் செய்து பெருகுவது வைரலாகி வருகிறது. அது குறித்த தகவல் பார்ப்போம்.. உலக அளவில் கங்குவா படம் இன்று ரிலீசாகியுள்ளது. முன்னதாக நடிகர் சூர்யா கூறும்போது, ‘வயதிற்கு தக்க இனிமேல் ரொமான்ஸ் படங்களில் தான் நடிக்க போவதில்லை’ என்று தெரிவித்துள்ளார். இனிமேல் முழுக்க முழுக்க ஆக்சன் படங்களில் மட்டுமே, தான் நடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், ரொமான்ஸ் படங்களுக்கு லேட் ஆகிவிட்டதாகவும்’ தெரிவித்துள்ளார். சூர்யா என்றால், அவரது ரொமான்ஸ் […]

மூத்த நடிகர் திருமாவளவன் அவர்கள் நடித்த திரைப்படம்: விஜய் ரசிகர்கள் பகிர்வு

மூத்த நடிகர் திருமாவளவன் அவர்கள் என, விஜய் ரசிகர்கள் இணையத்தில் பகிர்வது வைரலாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. தவெக கட்சி தொடங்கிய விஜய், விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பரபரப்பாக முழங்கியது தெரிந்ததே. தற்போது, ஆட்சியில் உள்ள திமுகவை விஜய் நேரடியாகவே விமர்சித்தார். இதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். விசிகவினரும் விஜய்யின் பேச்சுக்கு அரசியல் ரீதியாக பதிலடி கொடுத்து வந்தாலும், நேரடியாக இவர்கள் இருவருக்கு இடையில் இதுவரை மோதலோ இணக்கமோ ஏற்படவில்லை. அண்மையில் […]

‘விஜய் தரம் தாழ்ந்தவர் இல்லை’: போஸ் வெங்கட்டுக்கு இயக்குநர் அமீர் அறிவுறுத்தல்

போஸ் வெங்கட்டுக்கு, இயக்குனர் அமீர் கொடுத்த பதிலடி வைரலாகி வருகிறது. இது குறித்த பதிவினை காண்போம்.. தளபதி விஜய் சினிமாவில் இருந்து விலகி, முழு நேர அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அரசியல் களத்தில் இருந்த பலர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும், விமர்சனம் செய்வதும் தொடர்கிறது. இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில், விஜய்யின் பேச்சு குறித்து மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அவரது எக்ஸ் […]

ஷாலினியும் சங்கீதாவும் திடீர் சந்திப்பு: அஜித், விஜய் ரசிகர்கள் நெகிழ்ச்சி

ஷாலினியும் சங்கீதாவும் திடீரென சந்தித்து உரையாடிய நிகழ்வு ரசிகர்களால் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்தி காட்டினார் தளபதி விஜய் என்பது தெரிந்ததே. விரைவில், தன்னுடைய இரண்டாவது மாநாட்டுக்கான பணியில் மும்முரமாக இறங்கியுள்ளார் விஜய். மேலும், தன்னுடைய மகன் ஜேசன் சஞ்சய் திரைப்படம் இயக்க உள்ள தகவல் கூட, அது பற்றிய அறிவிப்பு வந்த பிறகு தான் விஜய்க்கே தெரிய வந்ததாக செய்திகள் வெளியானது. தன்னுடைய […]