36 ஆண்டுகளுக்கு பிறகு, ரஜினி நடித்த ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. இதற்கு முன்பு ரஜினிகாந்தின் 5 படங்கள் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளன. ரஜினியின் 171-வது படமான கூலி-யில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர், அமீர்கான் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. […]