Browsing tag

நீதிமன்றம்

விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு; விசாரணை..

நடிகரும், தமிழக வெற்​றிக்​ கழகத் தலை​வரு​மான விஜய்​யிட​மிருந்து தனக்கு சிறப்புத் திரு​மணச் சட்​டத்​தின்கீழ் விவாகரத்து கோரி இங்​கிலாந்து பிரஜை​யான அவரது மனைவி சங்​கீதா செங்​கல்​பட்டு நீதி​மன்​றத்தில் தாக்​கல் செய்​திருந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: ‘எனக்​கும், விஜய்க்கும் கடந்த 1998 ஜூலை 10-ல் இங்​கிலாந்தில் பதிவுத் திரு​மணம் நடந்​தது. அதன்​பிறகு எங்​களது திரு​மணம் இந்து முறைப்​படி 1999 ஆகஸ்ட் 25-ல் சென்னை ராஜா முத்தையா மன்​றத்​தில் நடந்​தது. எனது கணவர் தற்போது தவெக கட்சியைத் தொடங்கி அதன் தலை​வ​ராக உள்​ளார். […]

ஏ.ஆர்.ரகுமான் மீது வழக்கு: கோர்ட் அதிரடி உத்தரவு..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்​னி​யின் செல்​வன்’ 2-ம் பாகம் படத்​தில் இடம்​பெற்ற ‘வீர ராஜா வீரா’ பாடல் விவ​காரத்​தில் இசையமைப்​பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக இந்​திய பாரம்​பரிய பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் பதிப்​புரிமை வழக்கு தொடர்ந்தார். அதை விசா​ரித்த டெல்லி உயர்நீதி​மன்​றம், ஏ.ஆர். ரகுமானை கடந்த செப்​டம்​பரில் விடு​வித்​தது. இதை எதிர்த்து பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் மேல்முறையீடு செய்​தார். அந்த மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு மீண்​டும் விசா​ரித்​தது. ஏ.ஆர்.ரகுமான் […]

விஜய்க்கு ரூ 1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும்: கோர்ட் உத்தரவு..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ படம் சென்சார் பிரச்சினையில் உள்ளது. இது பற்றி நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சூழலில் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் பற்றிய தகவல்கள் காண்போம்.. கடந்த 2015-16 ஆம் நிதி யாண்டில் ரூ.35 கோடியே 42 லட்சத்து 91,890 என நடிகர் விஜய் வருமான வரிக் கணக்கு காட்டியிருந்தார். அதை மதிப்பீடு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், விஜய் வீட்டில் 2015-ம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் […]

‘பராசக்தி’ படம் ஓடிடி ரிலீஸ் வழக்கு: ஐகோர்ட் தள்ளிவைப்பு..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ படம் சென்ஸார் பிரச்சினையில் உள்ளது. இது தொடர்பாக நீதிமன்ற வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் கதை தனது ‘செம்மொழி’ கதையிலிருந்து திருடப்பட்டது என இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘கடந்த 1965-ம் […]

‘ஜனநாயகன்’ பட தணிக்கை விவகாரம்: இன்று இறுதி முடிவு..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த படத்தை பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்கள், படத்தை மறுஆய்வுக் குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், இந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, மறுஆய்வு குழுவுக்கு செய்த பரிந்துரையை ரத்துசெய்து, ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என்று கடந்த 8-ந்தேதி தீர்ப்பு […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் வழக்கில், மறுபடியும் சிக்கல்..

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத்தயாரிப்பு குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, இப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் […]

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகனுக்கு, முதல்படமான ‘நாளைய தீர்ப்பு’..

விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து பலர் தங்களின் கருத்துகளை கூறியிருக்கும் நிலையில், தயாரிப்பாளர் ராஜன் கூறியதாவது, ‘விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்தது தான் பிரச்சினை. அவர் சினிமாவிலேயே இருந்திருந்தால் ஜனநாயகன் படத்திற்கு இப்படி ஒரு கொடுமை நடந்திருக்காது. அவர் அரசியலில் குதித்தது, அதுவும் அவர் யாருடனும் கூட்டணி அமைக்காமல் இருப்பது தான் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம். […]

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்.. கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ‘புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் வழக்கில் வரும் 27-ந்தேதி தீர்ப்பு..

விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை, ஜனவரி 9-ந்தேதி வெளியிடத் தயாரிப்புக் குழு திட்டமிட்டது. எனினும், மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்து மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதால், சிக்கல் ஏற்பட்டது. இதை எதிர்த்துப் படத் தயாரிப்புக் குழு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜனவரி 9-ஆம் தேதி, தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாகச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை […]

‘ஜனநாயகன்’ படத்திற்கு நேர்ந்த புது நெருக்கடி..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனம் நெருக்கடி கொடுப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை என்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனநாயகன் பட நிறுவனத்துக்கு அமேசான் வீடியோ தெரிவித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால், ஜனநாயகன் படத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை […]