அஜித் கார் ரேஸ் வெற்றிக்கு, முக்கிய காரணம் யார்? வைரலாகும் நிகழ்வுகள்..

தனது கார் ரேஸ் வெற்றிக்கு காரணமானவர் பற்றி அஜித் தெரிவித்துள்ள நிகழ்வை இங்கே காண்போம்.. சினிமாவுக்காக சில ஆண்டுகள் கார் ரேஸில் பங்கேற்காமல் இருந்த அஜித், தற்போது மீண்டும் அதில் களமிறங்கி இருக்கிறார். இதற்காக, துபாயில் கடந்த சில மாதங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்ட அஜித், பின்னர் தனது அணி கார் ரேஸில், மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது. அஜித்தின் மனைவி ஷாலினி தன் மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்காவோடு வந்து கார் ரேஸை கண்டுகளித்தார். […]

‘புதிய பொலிவுடன்’ விஷால் தயாரித்து நடிக்கும் ‘துப்பறிவாளன்-2’ அப்டேட்ஸ்..

‘விழுவது தோல்வியல்ல; எழாமல் கிடப்பதே தோல்வி’ என்ற வாசகம் தற்போது விஷாலுக்கு பொருந்தியிருக்கிறது. திரைத்துறையில், தற்போது அவர் எழுந்து விரைந்தோடும் நிலை பற்றிப் பார்ப்போம். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதகஜராஜா’. 12 ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளியாகியுள்ளது. அனைத்து படங்களையும் கடந்து மக்கள் மத்தியில் ‘மத கஜ ராஜா’ வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வரவேற்பு குறித்து விஷால் தனது எக்ஸ் தளத்தில்.. ‘மத கஜ ராஜா’ திரையரங்குகளில் வெளியாகி மக்களின் […]

நடிகர் நாக சைதன்யாவுக்கு யார் மீது என்ன கோபமோ?: நெட்டிசன்ஸ் விவாதம்..

‘உள்ளம் என்பது ஆமை.. அதில், உண்மை என்பது ஊமை’ என்ற பாட்டு வரிகளுக்கு ஏற்ப, நாகசைதன்யா கூறியவற்றை பார்ப்போம்.. சமந்தாவை பிரிந்த நாகசைதன்யாவும் சோபிதாவும் ஒருவரையொருவர் புரிந்து காதலித்து, இரு வீட்டார் சம்மதம் பெற்றனர். சில மாதங்களுக்கு முன்பு, இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று, பின்னர் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் திருமணம் நடந்து முடிந்தது. இந்தத் திருமண வாழ்க்கையிலாவது நாக சைதன்யா நிலைத்திருக்க வேண்டும் என்று சமந்தாவின் ரசிகர்களும், அவரது ரசிகர்களும் கமெண்ட்ஸ் செய்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள். […]

யாரும் எனக்கு உதவவில்லை: இயக்குனர் கௌதம் மேனன் வருத்தம்..

விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படம் பற்றி கௌதம் மேனன் பகிர்ந்த நிகழ்வுகள் காண்போம்.. ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நிதி பிரச்சினை உட்பட பல பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. பின்னர், ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்தும் படக்குழுவால் திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. இந்நிலையில், கவுதம் வாசுதேவ் மேனன் […]

தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், கட்டிடம் ஒன்று வரப்போகிறது: நடிகர் விஷால் உறுதி

நடிகர் சங்கக் கட்டிடம் குறித்து விஷால் கூறிய தகவல்கள் பார்ப்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில், 12 ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து, தற்போது வெளியாகியிருக்கும் ‘மதகஜராஜா’ திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் படத்தினை கண்டுகளித்தார் விஷால். இதனை தொடர்ந்து, தி.நகரில் நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகளையும் மேற்பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் பலரும் விஷாலிடம் நலம் விசாரித்தனர். அப்போது பேசிய விஷால், ‘இன்னும் 4 மாதத்தில் தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், கட்டிடம் ஒன்று வரப்போகிறது. இங்கு வரும் […]

வணங்கான் : மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

வணங்கான் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் வணங்கான் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. இந்தத் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் பாலா இயக்கத்திலும் சுரேஷ் காமாட்சி தயாரிப்பிலும் உருவான இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் அருண் விஜய் நடித்திருக்கிறார். மேலும் சமுத்திரகனி, மிஸ்கின் ,ரோஷினி பிரகாஷ், போன்ற […]

சந்தானத்திற்கு வேண்டுகோள் வைத்த சுந்தர் சி., என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

சந்தானத்திற்கு சுந்தர் சி வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் நடிகராகவும் இருந்து வருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்திலும் விஷால் நடிப்பிலும் உருவான திரைப்படம் மதகஜராஜா. வரலட்சுமி சரத்குமார் ,அஞ்சலி ,சந்தானம், மயில்சாமி ,மணிவண்ணன், மனோபாலா, போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் வெளியானாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது. அதிலும் குறிப்பாக சந்தானத்தின் காமெடி பலராலும் பாராட்ட பெற்றுள்ளது […]

எதுவுமே பண்ணாம இவ்வளவு தூரம் வந்துட்டீங்க.. சௌந்தர்யா மற்றும் சுனிதா இடையே உருவான வாக்குவாதம்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சௌந்தர்யாவை பார்த்து சுனிதா எதுவுமே பண்ணாம […]

வந்தவுடன் அர்ணவை வச்சு செய்த சத்யா, ஜெஃப்ரி..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஜெஃப்ரி மற்றும் சத்யா இருவரும் பிக் […]

ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ‘ நாக பந்தம் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் விராட் கர்ணா – அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி – NIK ஸ்டூடியோஸ் – அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘ நாக பந்தம் ‘ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமான ‘ நாக பந்தம் ‘ எனும் திரைப்படத்தில் ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நாயகன் விராட் கர்ணாவின் பிரீ […]