Mudiyaadhey Lyrical Video
Mudiyaadhey Lyrical Video | VARUNAN God Of Water | Yuvan Shankar Raja | Bobo Shashi | Jaayavelmurugun
Mudiyaadhey Lyrical Video | VARUNAN God Of Water | Yuvan Shankar Raja | Bobo Shashi | Jaayavelmurugun
ஜெயிலர்-2 பட ஷூட் இன்று தொடங்கியுள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.650 கோடி வரையில் வசூல் குவித்தது. இதனைத் தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் உருவாகி, டீசர் வெளியானது. இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம், தங்களது எக்ஸ் பக்கத்தில், ‘முத்துவேல் பாண்டியனின் வேட்டை ஆரம்பம்; ஜெயிலர்-2 படப்பிடிப்பு […]
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பட வில்லன் வாய்ஸ் பார்ப்போம்.. பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் இளைய மகன் பாபி தியோல். இவர் ‘பர்சாத்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், ‘அனிமல்’ திரைப்படம் தான், தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமடைய வைத்தது. இதை தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அரசியலை […]
நயன்தாராவின் ஆவணப்பட வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்.. நயன்தாராவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற இணைய தொடர் நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான ‘நானும் ரவுடி தான்’ பட காட்சி சில நொடிகள் இடம் பெற்றிருந்தது. இந்தக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், நயன்தாராவுக்கு எதிராக […]
தனுஷ் நடிக்கும் பாலிவுட் படம் குறித்த அப்டேட் பார்ப்போம்.. தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தை தொடர்ந்து, ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ‘லப்பர் பந்து’ இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து, மாரி செல்வராஜ் இயக்கும் படம் என தொடர் பிஸியில் இருக்கிறார். இதற்கிடையே பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதன் ஷூட் டெல்லியில் நடந்து வருகிறது. […]
லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி சென்னை திரும்பிய இளையராஜாவின் இசைமொழி காண்போம்.. இசைஞானி இளையராஜா, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் தனது சிம்பொனி இசையை அரங்கேற்றி சென்னை திரும்பினார். இளையராஜா கம்போஸ் செய்த சுமார் 45 நிமிட சிம்பொனி இசையை கேட்ட ரசிகர்கள் மகிழ்ந்தனர். ஆசியாவிலேயே சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் இளையராஜா. சிம்பொனியை அரங்கேற்றி முடித்து இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் இளையராஜா. அவருக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. […]
வடசென்னை-2 படம் தொடங்குவது எப்போது? என்பது குறித்த தகவல் பார்ப்போம்.. வெற்றிமாறன்- தனுஷ் காம்பேக்கில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றது. இதற்கிடையே உருவான ‘வட சென்னை’ படமும் ரசிகர்களை கவர்ந்தது. இதன் பிறகு, இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியான காரணத்தால், வட சென்னை-2 படத்தில் இணைவது குறித்த தகவல் வெளியாகவில்லை. தனுஷ், நடிப்பிலும் இயக்கப் பணியிலும் தொடர்ந்து பிஸியாக இருக்கிறார். 2 வருடங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை. அதேபோல வெற்றிமாறனும், ‘வாடிவாசல்’ […]
விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் பாபி தியோல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இது […]
காதல் தோல்வி குறித்து உருக்கமாக பேசியுள்ளார் குக் வித் கோமாளி ஷிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் ஷிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார். கோமாளியாக இருந்தபோது எதுவுமே தெரியாமல் இருந்த சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக மாறி விதவிதமான டிஷ்களை சமைத்து செப்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் காதல் தோல்வி குறித்து உருக்கமாக […]
குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பிலும் மகிழ் திருமேனி இயக்கத்திலும் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கும் நிலையில் அவர்களுடன் இணைந்து சுனில், பிரசன்னா அர்ஜுன்தாஸ் போன்ற […]