நயன்தாரா – கவின் நடிப்பில் ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படம் காதல், ரொமான்ஸ், நகைச்சுவை, டிராமா உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த ரோம்-காம் படமாக உருவாகியுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான பயணத்தை மையமாகக் கொண்டுள்ளது. திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞராக கவின் நடித்துள்ளார். பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் நயன்தாராவை […]

சூரியின் மண்டாடி படத்திற்கு U/A 16+ சான்றிதழ்

சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, படம் செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தில் சூரியுடன் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம் […]

தவெக-வில் இருக்கிறேனா இல்லையா என்பதே தெரியாது – நடிகர் மன்சூர் அலிகான்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் உள்ள சாய்பாபா கோவிலில் நடிகர் மன்சூர் அலிகான் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் தனது நிலைப்பாடு குறித்தும், தமிழர் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் பேசினார். அப்போது பேசிய மன்சூர் அலிகான், “நான் தமிழக வெற்றிக் கழகத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் இணைந்தேன். ஆனால் தற்போது அந்தக் கட்சியில் இருக்கிறேனா, இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. நான் எனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” […]

“எந்தத் திட்டமும் எனக்கு இல்லை” – வதந்திக்கு பாடகர் வேடன் மறுப்பு

தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு இசைக் கலைஞர் வேடன் விளக்கம் அளித்துள்ளார். சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ரெஸ்டாரெண்ட் செயினை தொடங்க உள்ளதாகவும், இது தொடர்பாக தான் அறிக்கை வெளியிட்டதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும், இதுபோன்ற எந்த அறிக்கையையும் தான் வெளியிடவில்லை என்றும் வேடன் கூறியுள்ளார். சவூதி அரேபியா மட்டுமின்றி வேறு எந்த வளைகுடா […]

விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

விரைவில் வெளியாகவுள்ள தமிழ் காதல் பொழுதுபோக்கு திரைப்படமான ‘லைட்வெயிட், பேபி!’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹிதா ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. ஸ்டாண்ட்-அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் பிரபலமான ஆரத்தி கிருஷ்ணா இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல், நகைச்சுவை மற்றும் போட்டி நிறைந்த ஃபிட்னஸ் உலகத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் தனித்துவமான களத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிமுகப்படுத்துகிறது. வண்ணமயமான ஜிம் பின்னணியில் இடம்பெற்றுள்ள விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் மாறுபட்ட […]

கவுரி கிஷன் நடிக்கும் “தாரகை” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டுடியோவின் தயாரிப்பு எண் 1-ஆக உருவாகி வரும் திரைப்படம் ‘தாரகை’. க்ரிஷ் எழுதி இயக்கும் இப்படத்தில் கௌரி கிஷன் கதையின் நாயகியாக நடிக்கிறார். காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்களின் வாழ்க்கை, பயணம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சூழல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. கௌரி கிஷனின் முகத்தை மையப்படுத்தி, அவரைச் சுற்றிலும் வெவ்வேறு வயது மற்றும் பின்னணியைச் சேர்ந்த பல […]

ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா புதிய வெளியீட்டுத் தேதி!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் எழுதி இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடித்துள்ள நிலையில், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திலிருந்து வெளியாகியுள்ள ‘சிக்மா ஸ்டைல்’ மற்றும் ‘அய்யய்யோ அம்மாடி’ ஆகிய […]