ஏ.ஆர்.முருகதாஸின் ‘மதராஸி’: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..
தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் அடுத்த பெரிய படம் மதராஸி. செப்டம்பர் 5-ந்தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது. ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, அமீர்கான் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் முதல்முறையாக சிவகார்த்திகேயனை இயக்கியுள்ளார். இடையில் இப்படத்தின் எதிர்பார்ப்பு சற்று குறைவதாக தெரிந்த நிலையில், படத்தின் போஸ்டர்ஸ், கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி மீண்டும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் லுக்கில் இருந்து கதாபாத்திரம் வரை அனைத்துமே ‘மதராஸி’ படத்தில் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]