‘இட்லி கடை’ தனுஷ் குறித்து, பார்த்திபன் பதிவு செம வைரல்..

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், தனக்கே உரிய தனித்த பாணியில் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவு வழக்கம்போல வைரலாகி வருகின்றது. தனுஷின் இட்லி கடை திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். ‘தேசிய விருது பெற்ற ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் நடித்திருந்தால், மேலும் ஒரு தேசிய விருதை நான் வாங்கியிருப்பேன். ஆனால், அது மிஸ்ஸானது. அதுபோல, தனுஷுடன் நான் இணைந்து நடித்த ‘சூதாடி’ படமும் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தற்போது ‘இட்லி கடை’ படத்தில் அவரே என்னை […]

அஜித்தின் ‘AK64’ திரைப்படம் பற்றி, இயக்குநர் ஆதிக் அப்டேட்ஸ்..

‘தல’ அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வெற்றிக்கு பிறகு, ஆதிக் ரவிச்சந்திரனையே தன் அடுத்த பட இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளார் அஜித். இதனை ஆதிக் அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இப்படத்தை விநியோகஸ்தரான ராகுல் தயாரிப்பார் என கூறப்படுகின்றது. இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் ஏகே64 படம் குறித்து தெரிவிக்கையில், ‘குட் பேட் அக்லி’ படம், அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம். ஆனால், ஏகே64 திரைப்படம் வித்தியாசமாக அனைவருக்குமான படமாக இருக்கும். ரசிகர்கள் ரசிக்கும்படியான ஒரு என்டர்டைனிங் படமாக ஏகே64 இருக்கும்’ என்றார். […]

நயன்தாரா நடிப்பில் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ பட டீசர், வைரல்..

நயன்தாரா, நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் டீச வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஜார்ஜ் பிலிப்ராய் மற்றும் சந்தீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை வினீத் ஜெய்ன் மற்றும் நிவின் பாலி இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் நயன்தாரா, நிவின் பாலியுடன், புதுமுகங்கள் பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசரில், ‘உணவகத்தில் இருக்கும் நிவின் பாலியை விசாரிக்க, நயன்தாரா மஃப்டியில் வர.. அதிலிருந்து படத்தின் காட்சிகள் தொடங்கி மீண்டும் அங்கேயே வந்து முடிவது சிரிப்பலையை உருவாக்குகிறது. டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் […]

சம்பளம் வேண்டாம், ரஜினி சாருடன் நடித்ததே போதும்: அமீர்கான் பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம், முதல் நாளிலேயே 150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ரஜினியின் 171-வது படமான இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா என பலர் நடித்துள்ளனர். பாலிவுட் ஸ்டார் அமீர்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்காக, மெகா ஸ்டாரான அமீர்கான் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக வலைதளத்தில் செய்தி பரவியது. ஆனால், இதை அமீர்கான் மறுத்துள்ளார். ‘கூலி படத்துக்காக நான் […]

முட்டாள்தனமாக பேசியதற்கு, இப்போது வருந்துகிறேன்: நடிகை மிருணாள் தாக்கூர் பக்குவம்..

நடிகை மிருணாள் தாக்கூர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர், தனுஷை காதலிப்பதாகச் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அதை அவர் மறுத்திருந்தார். இந்நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார், மிருணாள். சில வருடங்களுக்கு முன் நடிகை பிபாஷா பாசு பற்றி அவர் பேசிய வீடியோ, இப்போது வைரலானது. அதில், ‘நான் பிபாஷா பாசுவை விட, நன்றாக இருக்கிறேன். ஆண்களைப் போல தசைகளைக் கொண்டவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? பிபாஷா பாசு இருக்கிறார்’ என […]

மதராஸி மற்றும் காந்தி கண்ணாடி படங்கள், ஒரே நாளில் ரிலீஸ்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில், மதராஸி படம் வரும் செப்டம்பர் 5-ந்தேதி திரைக்கு வரும் நிலையில், படம் குறித்த அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், கேபிஒய். பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ படமும் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான […]