Diesel Official Teaser
Diesel Official Teaser | Harish Kalyan | Athulyaa | Dhibu Ninan Thomas | Shanmugam Muthusamy
Diesel Official Teaser | Harish Kalyan | Athulyaa | Dhibu Ninan Thomas | Shanmugam Muthusamy
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சங்களை மீறி வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது ஜெயிலர்-2 படத்தில் ரஜினி இணைந்துள்ளார். இப்படத்தில் பிரபலங்கள் பலரும் நடித்து கொண்டிருக்கிறார்கள். அவ்வகையில் எஸ்.ஜே. சூர்யா ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் வில்லனாக கலக்கி வரும் எஸ்.ஜே. சூர்யா, தற்போது ரஜினியுடன் இணைந்திருக்கிறார். இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்க போகிறாரா […]
ரவிமோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கெனிஷாவுடன் வந்தார் ரவி மோகன். இருவரும் வெள்ளை நிற உடை அணிந்து நடந்து வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஜெனிலியா, தன் காதல் கணவரான ரித்தேஷ் தேஷ்முக்குடன் வந்திருந்தார். சிவராஜ்குமார் சிவகார்த்திகேயன், கார்த்தி, யோகிபாபு ஆகியோரும் வந்திருந்தார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரவி மோகன். இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் ரவிமோகனின் மைண்ட் வாய்ஸ் […]
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்து பாராட்டுக்களை குவித்திருந்தார் சிம்பு. பின்னர், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பணிகள் துவங்கப்பட்டது. இதனால், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘எஸ்டிஆர் 49’ தள்ளிப்போனது. இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பட்ஜெட் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடசென்னை கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில், எஸ்டிஆர் கேங்ஸ்டராக சிம்பு நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்காக ப்ரொமோ ஒன்றின் ஷுட்டிங்கையும் […]
கே.பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா நடிப்பில் வெளியான பழைய திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்’. தற்போது அறிமுக இயக்குநர் எம்.சுந்தர் இயக்கியுள்ள ‘அந்த 7 நாட்கள்’, கே.பாக்யராஜிடம் தலைப்பை அனுமதி வாங்கி பயன்படுத்தி உள்ளனர். காதல் படமான இதில் அஜித்தேஜ், ஸ்ரீஸ்வேதா, பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார். கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ளார். படம் பற்றி இயக்குநர் […]
சென்னையில், ரவி மோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. தான் அடுத்தடுத்து தயாரிப்பாளர், இயக்குனர் என இரு அவதாரங்களை எடுத்ததைப் பற்றி அறிவித்தார் ரவி மோகன். யோகிபாபு நடிப்பில் ரவி இயக்கவிருக்கும் படம், ஃபேமிலி என்டர்டைனர் ஜானராக இருக்கும் என கூறப்படுகிறது. இவ்விழாவிற்கு, சிவராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், யோகிபாபு உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், ‘பராசக்தி’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகின்றார் ரவி மோகன். இப்படத்தில் அவர் நெகட்டிவ் ஷேடில் நடித்து வருவதாக […]
ரவிமோகன் தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும், ‘கரேத்தே பாபு’ படத்தில் ஹீரோவாக இணைந்துள்ளார். இந்நிலையில், ரவி மோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா மற்றும் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பலர் கலந்து கொண்டனர். தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் குறித்த அறிவிப்பை ரவிமோகன் வெளியிட்டார். ‘டிக்கிலோனா’, […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஷ் இயக்கி வெளியான ‘கூலி’ படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் இருவரும் கலந்துரையாடினர். அப்போது, கமல்ஹாசன் வங்க மொழி அறிந்தவர் என்றும் சத்யராஜ் கூற, அதற்கு ஸ்ருதிஹாசன் பதில் அளித்தார். ‘அப்பா வங்க மொழி ஏன் கற்றுக் கொண்டார் என்றால், அப்போது அவருக்கு அபர்ணா சென் மீது காதல் இருந்தது. அவரது மனதை கவரும் வகையில் வங்க […]
விஜயகாந்த்தின் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ‘மகுடம்’ படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது. விஷால் படக்குழுவினருடன் இணைந்து விஜயகாந்த் படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விஷால் பேசும்போது, ‘மறக்க முடியாத ஒரு நபர், நடிகர், அரசியல்வாதி. எந்த துறைக்கு சென்றாலும், அதில் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். தான் சாப்பிடும் உணவு தான் படப்பிடிப்பு தளத்தின் கடைசி ஊழியர் வரை சாப்பிட வேண்டும் என்று கொண்டுவந்தவர் விஜயகாந்த் சார். அவர் இன்று இல்லை […]
‘அழகர் யானை’ பட பூஜை முடிந்து, தற்போது படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதன் கதைக்களம் பற்றி இங்கே காண்போம்.. ’மரகதக்காடு’ படத்தை இயக்கிய மங்களேஷ்வரன் அடுத்து இயக்கும் படம் ‘அழகர் யானை’. விஜய் டிவி புகழ், ‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ் உள்பட பலர் நடிக்கின்றனர். குறிப்பாக, 80 அடி உயர யானை ஒன்று இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. ’அழகர் யானை’ குறித்து இயக்குநர் மங்களேஷ்வரன், தெரிவிக்கையில், ‘இன்றைய சூழலில் வாழ்வின் மீதான நம்பிக்கை […]