பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படத்தின் தகவல்கள்..

தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ‘லவ் டுடே’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் நடிப்பில வெளியான படம் ‘டிராகன் ‘. தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் […]

பிரித்விராஜ்-தருண் மூர்த்தி கூட்டணியில் ‘ஆபரேஷன் கம்போடியா’ திரைப்பட அப்டேட்ஸ்..

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகர் பிருத்விராஜ். இவர் மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களைக் கொடுத்ததுடன் லூசிபர், ப்ரோ டாடி, எம்புரான் ஆகிய திரைப்படங்களை இயக்கி இயக்குநராக அங்கீகாரம் பெற்றார். குறிப்பாக, மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான எம்புரான் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. அண்மையில், இவர் நடிப்பில் வெளியான இந்திப் படமான சர்சாமின் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மோகன்லாலின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த, ‘துடரும்’ […]

‘இட்லி கடை’ படத்திற்கு எதிராக ‘ஹாஸ்டேக்’ டிரெண்டிங்..

தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் கவனித்து வந்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தற்போது அவரின் மகன் உதயநிதி கவனித்து கொள்கின்றார். அரசியல் களத்தில் தற்போது விஜய் vs உதயநிதி என்பது போல தான் போய்க்கொண்டு இருக்கின்றது. விஜய் திமுக கட்சியை தனது கூட்டத்தில் விமர்சிப்பதும் பதிலுக்கு உதயநிதி ஸ்டாலின் பேசுவதும் இப்படியே இந்த விவாதம் போய்க்கொண்டு இருக்கின்றது. மேலும் இரு அரசியல் கட்சி தொண்டர்களுக்கும் […]

அனைத்து தயாரிப்பாளர்களும் வெட்கப்பட வேண்டும்: ராம் கோபால் வர்மா பதிவு..

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. இந்தப் படம் காந்தாரா நிகழ்வுகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. ரிஷப்பைத் தவிர, இப்படத்தில் ருக்மிணி வசந்த், ஜெயராம் மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட்டில் சத்யா, ரங்கீலா போன்ற பல படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மா, இப்படத்தை பாராட்டியுள்ளார். ‘ரிஷப்பின் உழைப்பைப் பார்த்து இந்தியாவின் அனைத்து […]

என் ரசிகர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்: அஜித் வாய்ஸ்..

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் குழு பங்கேற்றுள்ளது. இதனிடையே அஜித் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘வரும் ஆண்டில் நிறைய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முயற்சிக்கிறேன். எனவே, விளையாட்டுக்கும் இந்திய திரைப்படத் துறைக்கும் முக்கியத்துவத்தை தரும் ஒத்த எண்ணம் கொண்டவர்களைக் கண்டறிய வேண்டும். ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸை ஒரு தளமாகப் பயன்படுத்த விரும்புகிறேன். சர்வதேச அளவில் நிறைய விருதுகள் வழங்கப்பட்டு விழாக்கள் […]

கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம்: விஜய் ஆறுதல்..

கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கரூர் போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக […]

‘ஓஜி’ பட இயக்குநர் சுஜித் இயக்கத்தில் நானி நடிக்கும் புதிய படம்..

நானி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தகவல்கள் காண்போம்.. பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஓஜி’ படத்தின் இயக்குநர் சுஜித். இவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது நானி நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் சுஜித். இதன் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு நானி – சுஜித் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள். முன்னதாக, நானி படத்தின் பணிகளை பல மாதங்களாகவே செய்து வந்தார் […]

அரசியலில் போட்டி பயங்கரமானதாக இருந்தால்தான், வெற்றி நியாயமானதாக இருக்கும்: பார்த்திபன் கருத்து..

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது; ‘தற்போதைய அரசியல் சூழலில் நிறைய வசதியும், பணமும் தேவைப்படுகிறது. மனதில் வீராப்பும், நல்ல எண்ணமும் இருந்தால் கூட, அதை மட்டும் வைத்துக் கொண்டு இங்கு அரசியல் செய்துவிட முடியாது. அரசியல் என்பது வேறொரு மிகப்பெரிய களம். புதிதாக யார் வந்தாலும் அவர்களை நான் வரவேற்கிறேன் யாரோ ஒருவர் மட்டும் ஓடிச்சென்று பதக்கம் வாங்குவதற்கு பதிலாக, ஒரு பெரிய கூட்டமே […]

மம்முட்டி-மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘பேட்ரியாட்’ திரைப்படம் அப்டேட்ஸ்..

மம்முட்டி – மோகன்லால் இணைந்து நடித்து வரும் படத்துக்கு ‘பேட்ரியாட்’ எனப் பெயரிடப்பட்டு டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் புதிய படம் ஒன்றில் நடித்து வந்தார்கள். இப்படம் மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது. சமீபத்தில் மம்முட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இதன் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது அவர் உடல்நிலை தேறி திரும்பியிருப்பதால் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இப்படத்துக்கு ‘பேட்ரியாட்’ என பெயரிட்டுள்ளது படக்குழு. மேலும், […]

சினிமாவை கொல்லாதீர்கள்: பவன் கல்யாண் பேச்சு..

‘ஓஜி’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ‘ஓஜி’ படத்தின் முந்தைய பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தினார் பவன் கல்யாண். மேலும், இப்படத்தில் ஜப்பானுக்கு சென்று சில காட்சிகளை படமாக்க இயக்குநர் விரும்பினார். ஆனால், தன்னால் முடியாமல் போய்விட்டதை நினைத்து வருந்துவதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் பவன் கல்யாண். மேலும், அவர் பேசும்போது, ‘ரசிகர்களுக்கு படத்துக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. […]