இயக்குநர் ராஜமவுலி மீது, இந்து அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார்..
இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநரான ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் ‘வாரணாசி’ படத்துக்காக ‘குளோப் டிரோட்டர்’ என்ற சாகச உலகத்தைப் படக்குழு உருவாக்கியுள்ளது. இதற்கான விழாவை ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்தது படக்குழு. இந்த நிகழ்வில் படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு வெளியிட்டது. இந்த நிகழ்வில் பேசிய ராஜமவுலி, ‘எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அவர் இப்படித்தான் […]