சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் நிர்வாகிகள் சந்திப்பு.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

  சென்னையில் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் கூட்டம்.. 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், அனைத்து மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். […]

தமிழில் அறிமுகமானது பெருமை.. சிக்மா குறித்து நடிகை ஃபரியா அப்துல்லா

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களின் வாய் வழிப் பாராட்டுகள் காரணமாக, படத்தைப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்‌ஷன், அட்வென்ச்சர் மற்றும் ஹெய்ஸ்ட் எண்டர்டெயின்மென்ட் ஜானரில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகை ஃபரியா அப்துல்லா தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். படத்தின் வெற்றி […]

ஜான்வி கபூர் பாடல் காட்சிகள் AI மூலம் மார்பிங்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

நடிகை ஜான்வி கபூரின் ‘தேவரா’ திரைப்படப் பாடல் காட்சிகளை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மற்றும் அவற்றை இணையத்தில் வெளியிட்டவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்திற்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், AI தொழில்நுட்பத்தை […]

ரஷ்மிகா எனக்கு மனைவியாகக் கிடைத்தது பெரிய பாக்கியம் – விஜய் தேவரகொண்டா

நடிகர் விஜய் தேவரகொண்டா தனது திருமண வாழ்க்கை குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “நான் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் இருக்கிறேன். ரஷ்மிகா எனக்கு மனைவியாகக் கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். உறவை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் நான் முதிர்ச்சியடைந்தவன். ஆனால், ரஷ்மிகா தினமும் குறைந்தது 15 முறையாவது ‘I Love You’ என்று சொல்லச் சொல்லி என்னை நினைவூட்டிக்கொண்டே இருப்பார். அது ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும், உறவில் தொடர்ந்து […]

மீண்டும் படம் தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா: ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் இயக்குகிறார்

தமிழ் திரையுலகில் புதுமையான முயற்சிகளையும், வித்தியாசமான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். புதிய தொழில்நுட்பங்களுடன், வழக்கமான திரைப்பட உருவாக்க முறைகளைக் கடந்து தனித்துவமான படைப்புகளை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும். 33 ஆண்டுகளாக கலை இயக்குநராகப் பணியாற்றி வரும் டி. முத்துராஜ், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் இயக்கி, தயாரிக்கும் புதிய திரைப்படம், ‘ஹைப்பர் ரியலிஸ்டிக் […]