சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படமும் பொங்கலை முன்னிட்டு களம் இறங்குகின்றன. இந்நிலையில், சென்னையில் ஃபேன்லி (Fanly) என்ற ஆப்பின் அறிமுக விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அந்நிகழ்வில் சிவகார்த்திகேயன் பேசும் போது, ‘இந்த மேடையில் இருந்த 3 பேருக்குமே மூளை அதிகம், எனக்கு குறைவு. அதனாலேயே […]
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இதற்கிடையில்,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்திசெட்டி, சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மலேசியா, சிங்கப்பூர் […]
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம் ஆண்டு வெளியான படம் ‘எஜமான்’. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, நெப்போலியன், செந்தில், கவுண்டமணி, விஜயகுமார், ஐஸ்வர்யா, மனோரமா, நம்பியார் உள்பட பலர் நடித்திருந்தனர். ரஜினியின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ஹிட். சிறுவயதில் ‘ரஜினி அங்கிள்’ […]
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ‘காந்தாரா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பூத கோலா வழிபாட்டு முறையை ரன்வீர் சிங் நடித்துக் காட்டினார். மேலும், அந்தத் தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் செயல் துளு நாடு மக்களின் மத உணர்வுகளைப் […]
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், வேல்ஸ் நிறுவனத்துக்கு சிம்புவின் தேதிகள் எப்போது என்பது தெரியாமல் படம் தொடங்க முடியாத சூழல் உருவானது. இதனால் சிம்பு – வேல்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் வேல்ஸ் நிறுவனத்துக்கு எப்போது தேதிகள் என்பதை சிம்பு தெரிவிக்க வேண்டும் அல்லது அஸ்வத் மாரிமுத்து படத்துக்கு முன்னதாக வேல்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய அட்வான்ஸ் தொகையினை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று சிம்புவிடம் […]
மோகன்ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரெளபதி 2’. ஜிப்ரான் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ’எம்கோனே’ வெளியாகியுள்ளது. இதனை சின்மயி பாடியுள்ளார். இதனை இணையத்தில் பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். இது தொடர்பாக மன்னிப்புக் கேட்டுள்ள சின்மயி, ‘எம்கோனே பாடலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஜிப்ரான், நான் ஜிங்கிள் பாடும் நாட்களில் இருந்து 18 வருடங்களாக எனக்குத் தெரிந்த ஓர் இசையமைப்பாளர். அவரது அலுவலகத்தில் இருந்து இந்தப் பாடலைப் பாட அழைத்தபோது, […]
ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருக்கும் ‘தலைவர்-173’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. பார்க்கிங்” படம் மூலம் தேசிய விருது பெற்று கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து NOC-க்காக தற்போது காத்துக்கொண்டு இருக்கிறார். ஏனென்றால், அவர் இதற்கு முன்பு சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. அப்படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவிருந்தார். சில காரணங்களால் அப்படம் துவங்க தாமதமானதால் ராம்குமார் பாலகிருஷ்ணன் தற்போது ரஜினி நடிப்பில் படமெடுக்க […]
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் தனது கடைசிப் படமாக ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். அரசியல் பேசும் இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில், கமல்ஹாசனிடம், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ‘திமுக தான் தங்களுக்கு முக்கிய எதிரி’ என விஜய் கூறி வருகிறார். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டதற்கு கமல்ஹாசன் கூறியதாவது, ‘என் எதிரி, நேரடி எதிரி என்றால் அது சாதிவெறி தான். சாதிவெறி என்பது […]