தொடர்ந்து வரும் பண்டிகைகளை முன்னிட்டு வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்து, துணிகளை அள்ளிச் சென்றார் நடிகை ஜாங்கிரி மதுமிதா

டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ், பொதுமக்கள் எளிதில் சென்றடையக்கூடிய வசதியான இடத்தில் உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட பாலத்திலிருந்து இறங்கியவுடன் இடது பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால், எந்த சிரமமும் இன்றி அணுக முடிகிறது. 2-வீலர், 4-வீலர் வாகனங்களுக்கு விசாலமான பார்க்கிங் வசதியும், ரயில் மற்றும் பேருந்து மூலம் வரும் வாடிக்கையாளர்களுக்கு நடைபாதை தூரத்திலேயே ஸ்டோரைக் அடையக்கூடிய வசதியும் இருப்பதால், வேலவன் ஸ்டோருக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் […]

‘ஜனநாயகன்’ படத்துடன் விஜய்க்காக உருவாக்கப்பட்ட 16 நிமிட சிறப்பு வீடியோ..

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் தற்போதைய தகவல்கள் பார்ப்போம்.. விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கில் வெளியான ‘பகவந்த்கேசரி’ படத்தை தழுவி தமிழுக்கேற்ப மாற்றங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் அரசியல் பேசும் படமாகவும் அதே நேரத்தில் கமர்ஷியலாகவும் எடுக்கப்பட்டுள்ளது.இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்பட பலர் […]

சீண்டலாக கேள்வி கேட்டவருக்கு, நடிகர் சுதீப் செம பதிலடி; வைரலாகும் நிகழ்வு..

சமீபத்தில், நடிகை சினேகாவிடம் ஒரு நபர் ‘உங்கள் அழகின் ரகசியம் என்ன?’ என கேள்வி கேட்டதற்கு, அருகிலிருந்த பிரசன்னா, ‘கேள்வி கேட்டவரைப் பார்த்து நாக்கை துருத்தி செல்லமாக மிரட்டினார். அதுபோல ஒரு நிகழ்வு இதோ. இது வேறலெவலில் வைரலாகும் சுதீப்பின் பதிலடி.. விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க்’ என்ற படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற 25-ந்தேதி ரிலீஸாகிறது. இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து […]

விஜயகாந்துடன் பழகிய எனது காலங்கள்: சரத்குமார் நெகிழ்ச்சி பேச்சு..

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள ‘கொம்புசீவி’ படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். புதுமுகம் தார்னிகா, சுஜித் ஷங்கர், கல்கி, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 19-ந்தேதி வெளியாகிறது. இப்படம் தொடர்பாகவும் கடந்த கால நிகழ்வுகள் குறித்தும் சரத்குமார் தெரிவிக்கையில், ‘இந்தப் படத்தில் நடிப்பதற்கு இயக்குநர் பொன்ராம் ஒரு காரணமாக இருந்தாலும், சண்முக பாண்டியன் நடிக்கிறார் என்றதும் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனெனில், என் […]

‘பராசக்தி’ படத்தின் ஓடிடி உரிமை விற்பனை ஆனது..

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ’பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இதன் ஓடிடி உரிமம் விற்கப்படாமல் இருந்தது. இப்படத்தின் உரிமையினை ஓடிடி நிறுவனங்கள் வாங்க தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகின. ஏனென்றால், இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் நடந்த கதை எனவும் கூறப்பட்டது. இதனிடையே, ஜீ5 நிறுவனம் ‘பராசக்தி’ படத்தின் ஓடிடி உரிமையை பெற்றுள்ளது. இந்த உரிமையினை ரூ.52 […]

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: எஸ்.ஏ.சந்திரசேகர் சூசகம்..

விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள ‘கொம்பு சீவி’ படத்தில் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் 19-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், ‘கொம்பு சீவி என கிராமப்புறத்தில் காளையை குறிப்பிடுவார்கள். இதில் யார் […]

‘குட் பேக் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்கள் வழக்கு, கோர்ட் முடித்து வைப்பு..

அஜித் தற்போது மலேசியாவில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், இவரது நடிப்பில் ஆதிக் இயக்கி வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில், தன் அனுமதியில்லாமல், ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்தது சென்னை உயர் நீதிமன்றம்.’ விசாரணையில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. […]