ராதிகா நடிக்கும் ‘தாய் கிழவி’ படத்தை ரசிகர்கள் கொண்டாடுவர்: இயக்குநர் நம்பிக்கை..

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தின் தலைப்பு மற்றும் டீஸர் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ராதிகா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது லுக் மற்றும் டீஸர் இரண்டிற்குமே இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். ’தாய் கிழவி’ படத்தினை சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரித்திருக்கிறது. பிப்ரவரி 20-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை உரிமை, ஓடிடி உரிமை, தொலைக்காட்சி உரிமை மற்றும் வெளிநாட்டு உரிமை என அனைத்துமே விற்பனையாகிவிட்டது. இதனால் படம் வெளியாவதற்கு […]

மதுரை பின்னணியில் உருவாகும் ‘செவல காள’ படத்தின் அப்டேட்ஸ்..

மதுரை பின்னணியில் உருவாகும் ‘செவல காள’ படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கிறார். விங்ஸ் பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பால் சதீஷ் இயக்குகிறார். இதில் நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கிறார். சம்பத் ராஜ், ஆர்யன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆர்.ராஜாமணி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு பிரித்வி இசையமைக்கிறார். இப்படம் பற்றி இயக்குநர் பால் சதீஷ் கூறும்போது, ’25 வருடங்களுக்கு முன் உதவி இயக்குநராகச் சேர சில […]

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர்? வெளியான சூப்பர் தகவல்.!!

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தப் படத்தில் பாலையா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே சூர்யா, சந்தானம், பஹத்பாசல், தமன்னா, வித்யா பாலன் […]

பராசக்தி கதையில் சூர்யா நடிக்காமல் போனதற்கு காரணம் இதுதான்.. சுதா கொங்காரா ஓபன் டாக்.!!

பராசக்தி கதையில் சூர்யா நடிக்காமல் போனதற்கு காரணத்தை கூறியுள்ளார் சுதா கொங்காரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் முதலில் புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்க இருந்த திரைப்படம் ஆனால் சில காரணங்களால் இது கைவிடப்பட்டது. இந்த நிலையில் ஏன் சூர்யா இந்த படத்தில் நடிக்கவில்லை […]

நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழிக்காரா” வைரல் பாடல் !!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. “கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் […]

நந்தினியை அசிங்கப்படுத்தும் சுந்தரவல்லி,சவால் விடும் சூர்யா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுரேகா அசோகன் மூவரும் உட்கார்ந்து அம்மா என்னை திட்டம் போட்டு இருப்பாங்க என்று பேசிக்கொண்டு இருக்க நந்தினி சூர்யா சட்டை உடன் வெளியில் […]

விஜயாவை திட்டிய குடும்பத்தினர், மனோஜ்க்கு வந்த பண பிரச்சனை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவை குடும்பத்தினர் திட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா என்ன தப்பு செய்தா என்று அண்ணாமலை கேட்க பார்வதி வீட்டில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் முத்து மீனா சொல்லி விடுகின்றனர் உடனே அண்ணாமலை இதெல்லாம் உனக்கு தேவையா விஜயா முத்து மீனா மேல வர பழி போடுற இது மாதிரி நீ பார்வதி மேல சொல்றது ரொம்ப தப்பு என்று சொல்லுகிறார் […]

‘சிறை’ படம் பார்வையாளர்களை ஈர்த்ததா?: திரை விமர்சனம்

பொதுவாக, மனித வாழ்வில் யாரும் நல்லவர்களும் இல்லை; கெட்டவர்களும் இல்லை. அவ்வப்போது நேரிடும் மன அழுத்தங்களால் தீதும் நன்றும் நிகழ்ந்து விடுகிறது. எச்சூழலிலும் நிலைமாறாத கருணைமனம் காலத்தால் போற்றப்படுகின்றது. இதனை நுட்பமாய் உணர்ந்து உயர்தலே மனித தர்மம். அனைத்து மறையும் வலியுறுத்தும் வாழ்வியல். இப்ப ‘சிறை’ திரைப்படம் பற்றிய விஷயத்திற்கு வருவோம்.. விக்ரம் பிரபுவின் 25-வது திரைப்படமாக இப்படம் வெளியாகி இருக்கிறது. இதன் மூலமாக இயக்குநர் வெற்றிமாறனிடம் பணிபுரிந்த சுரேஷ் ராஜகுமாரி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் தமிழ் […]