ஜனநாயகனை கொண்டாட வேண்டும்: சிவகார்த்திகேயன் பேச்சு..
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வருகிற 10-ந்தேதி ரிலீஸாகிறது. இச்சூழலில் வெளியான டிரெய்லர் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படம் பற்றி சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில், ‘பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்டது. அந்த பெயருக்கு ஏற்றபடி, இந்தப் படமும் அதே அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். 1960-களுக்கு டைம் […]