விளையாட்டு மீது அளவு கடந்த காதல் உண்டு: அஜித் பேச்சு வைரல்..

அஜித் நடிப்பில் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு அஜித் தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கடந்த ஆண்டு முதல் கார் ரேஸ் சிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித், ரேசிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த அணி ஐரோப்பிய என்டூரன்ஸ் […]

அதுதான் என் பிரச்சினை: நடிகை கயாடு லோகர் ஃபீலிங்ஸ்..

அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘டிராகன்’ படத்தில் அறிமுகமானார் கயாடு லோகர். அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகியாக மாறிவிட்டார். தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜி.வி.பிரகாஷ் உடன் ‘இம்மார்டர்’ என்ற படத்திலும், சிம்பு நடிக்கும் எஸ்டிஆர்-49 என்ற படத்திலும் இணைந்துள்ளார். அடுத்ததாக ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநர் தமிழரசன் இயக்கும் படத்தில் தனுசுடன் கயாடு லோகர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் […]

நான் படாத கஷ்டமே கிடையாது: சாய் தன்ஷிகா ஓபன் டாக்..

சாய் தன்ஷிகா ஆக்சன் அவதாரமாக நடித்த ‘யோகிடா’ படம் தியேட்டர்களில் ரிலீஸாகி இருக்கிறது. கவுதம் கிருஷ்ணா இயக்கிய உந்த படத்தில் ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளார் தன்ஷிகா. டூப் வேண்டாம் என்று சொல்லி அவர் ஆக்சன் காட்சி ஒன்றில் நடித்தபோது பீர் பாட்டில் குத்தி அவருக்கு கண்ணுக்கு கீழ் காயம் ஏற்பட்டது. இப்படி அவர் கஷ்டப்பட்டு நடித்த ‘யோகிடா’ படம் பார்ப்பவர்கள் சாய் தன்ஷிகாவின் நடிப்பை பாராட்டுகிறார்கள். 17 ஆண்டுகளாக தனக்கு சினிமா பட வாய்ப்பு […]

எங்க அண்ணனுக்காக குரல் கொடுப்பேன்: ‘ஜனநாயகன்’ விவகாரம் பற்றி சிம்பு..

ஹெச்.வினோத் இயக்கத்தில் தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால், சென்சார் சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி படம் ரிலீஸாகாது என கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, சென்சார் போர்டு சிக்கல் தொடர்பாக முதலில் உயர் நீதிமன்றத்திற்கும், பிறகு உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றது ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம். இந்நிலையில் ஜனநாயகன் குறித்து சிம்பு சொன்ன கருத்து வைரலாகி விட்டது. இது […]

‘பராசக்தி’ படம் ஓடிடி ரிலீஸ் வழக்கு: ஐகோர்ட் தள்ளிவைப்பு..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ படம் சென்ஸார் பிரச்சினையில் உள்ளது. இது தொடர்பாக நீதிமன்ற வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் கதை தனது ‘செம்மொழி’ கதையிலிருந்து திருடப்பட்டது என இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘கடந்த 1965-ம் […]

தளராத அர்ப்பணிப்பால் எழுதப்படும் ஒரு பயணம்: சூரி பதிவு..

நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரி தற்போது நாயகனாக முத்திரை பதித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ‘மாமன்’ படம் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து சூரி ஹீரோ​வாக நடித்து வரும் படம் ‘மண்டாடி’. மதி​மாறன் புகழேந்தி இயக்கும் இந்​தப் படம், படகு பந்தயத்தை மையமாகக் கொண்டு உரு​வாகிறது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்​மென்ட் சார்​பில் எல்​ரெட் குமார் தயாரிக்​கிறார். இப்​படத்​தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்​பி​யார், சத்​ய​ராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஜி.​வி.பிர​காஷ் […]

எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது.. சிலம்பரசன் ஓபன் டாக்..!

எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது என சிலம்பரசன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் […]

நான் டிரம் அடிப்பேன் ஆனால் தம் அடிக்க மாட்டேன்.. டி ராஜேந்தர் பேச்சு.!!

நான் டிரம் அடிப்பேன் ஆனால் தம் அடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். நடிகர் இயக்குனர் இசையமைப்பாளர் பின்னணி பாடகர் என பன்முகம் திறமை கொண்டவர் டி ராஜேந்தர். இவரது மகன் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் உயிருள்ளவரை உஷா படத்தின் ரீ ரிலீஸ் செய்தியாளர் சந்திப்பில் டி ராஜேந்தர் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர் வழக்கம் போல் அவரது […]

‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி 2018 ஆம் ஆண்டில் ‘குயின் – (Queen) படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து […]

தமிழக அரசின் திரைப்பட விருதுகள்.. குஷியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா..!

தமிழக அரசின் திரைப்பட விருதுகளுக்காக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சந்தோஷப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நயன்தாரா இவர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் படம் இயக்குவது நடிப்பது என பிசியாக இருந்தாலும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படங்களுக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கு விக்னேஷ் சிவன் மற்றும் […]