விஜய்யின் பிறந்த நாளில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்?

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர். ஜனவரி 9-ந்தேதி வெளியாக இருந்த இப்படம், சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கலால் தள்ளிப்போனது. தணிக்கை வாரியத்தின்மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்ற போதிலும், இப்படத்தை ரிவைஷிங் கமிட்டியினர் எப்போது பார்க்கிறார்கள் என்ற விவரம் சொல்லப்படவில்லை. ஆகவே, சுமார் இரண்டு மாதங்களாகியும் இப்பட வெளியீடு எப்போது […]

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் ‘புருஷன்’ பட கதைக்களம்..

நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது தெரிந்ததே. இச்சூழலில் உருவாகும் ‘புருஷன்’ பட தகவல்கள் பார்ப்போம்.. விஷால், சுந்தர்.சி கூட்டணியில் உருவான ‘மதகஜ ராஜா’ பட வெற்றியை தொடர்ந்து ‘புருஷன்’ படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளது. விஷால் இயக்கி வரும் ‘மகுடம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘புருஷன்’ படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியிருக்கிறார் விஷால். இதனை பென்ஸ் மீடியா மற்றும் அவ்னி சினி மேக்ஸ் ஆகிய […]

தயாரிப்பாளராக களம் இறங்குகிறார் பிரதீப் ரங்கநாதன்..

தமிழ் சினிமாவில் லவ்டுடே, டிராகன், டியூட் என ஹாட்ரிக் வெற்றி பெற்றிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநர், நடிகராக வலம் வரும் பிரதீப் இப்போது தயாரிப்பாளராகவும் மாறவுள்ளார். தொடர்ச்சியாக வெற்றிப் பாதையில் இருப்பதால், இவரது கால்ஷீட் தேதிகளுக்காக பல்வேறு தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், தயாரிப்பாளராகவும் களமிறங்க பிரதீப் ரங்கநாதன் முடிவு செய்திருக்கிறார். அவருடைய கதையை, அவரது உதவி இயக்குநர் இயக்கவுள்ளார். நாயகியை மையப்படுத்திய இக்கதையில் மமிதா பைஜு நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு […]

75 வயது மனிதர் தெளிவான ஐந்தாண்டு திட்டத்தைக் கொண்டுள்ளார்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி நெகிழ்ச்சி..!

75 வயது மனிதர் தெளிவான ஐந்தாண்டு திட்டத்தைக் கொண்டுள்ளார் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து கருப்பு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படம் கோடை காலத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் […]

அரசன் படம் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட சமுத்திரக்கனி.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

அரசன் படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் சமுத்திரக்கனி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா,விஜய் சேதுபதி, கிஷோர் குமார், சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இந்த படம் குறித்து […]

ரஜினி,கமல், விஜய்.. நீங்கள் யாருடைய ரசிகன்? அனிருத் சொன்ன பதில்..!

ரஜினி கமல் விஜய் இவர்கள் மூவரில் நீங்கள் யாருடைய ரசிகன் என்ற கேள்விக்கு அனிருத் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி ,மான்கராத்தே கத்தி,யென தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியாக இருந்த ஜனநாயகன்படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார். அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இசையமைத்து […]

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி; ‘அலைபாயுதே-2’ ரேஞ்ச்?

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார். ரன்வீர் கபூர், யாஷ் நடிக்கும் `ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ள அவர், அமிர்கான் மகன் ஜூனைத்கான் ஜோடியாக ‘மேரே ரஹோ’ என்ற படத்தையும் முடித்துள்ளார். இதில் ‘ராமாயணம்’ இவ்வருட தீபாவளிக்கும் ‘மேரே ரஹோ’ ஜூலை மாதமும் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் அவர் மணிரத்னம் இயக்கும் ரொமான்டிக் படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படம் குறித்த […]

தடைகளை போடுபவர்கள் யார் தெரியுமா?: சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..

சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார் என வெளிப்படையாக பேசியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், சிவகார்த்திகேயன் பேசும்போது, ‘சினிமாவில் ஏதேனும் ஒரு ரோலில் நடித்து விட வேண்டும் என்று வந்தவன் நான். […]

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் ஏற்கனவே இந்த படத்தை […]

மீனாவை வீட்டை விட்டுக் துரத்த சொன்ன சாமியார் பெண்மணி.. விஜயாவுக்கு காத்திருந்த பேரஅதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பூஜைக்கான ஏற்பாடுகளை மீனா வீட்டில் செய்து கொண்டிருக்க அண்ணாமலை என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார் அதுதானா பூஜைக்கு ஏற்படுத்தியிருக்கேன்னு சொல்லி இருக்காங்க இன்னைக்கு சாமியார் அம்மா வராங்க அவங்க ரொம்ப சக்தி வாய்ந்தவங்களா அவங்க சொன்னா எல்லாமே நடக்கும்னு சொல்றாங்க அதனால […]