பிரபாஸ் பிறந்தநாளில் அடுத்தடுத்து வந்த படங்களின் அப்டேட்ஸ்

இந்திய சினிமாவின் ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ்: பாக்ஸ் ஆபீஸ் சாதனைகள் முதல் அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்கள் வரை! ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தியவர், ‘சலார்’ படத்தின் மூலம் பான் இந்திய ரசிகர்களைக் கவர்ந்தவர், ‘கல்கி 2898 ஏ.டி.’ மூலம் அறிவியல் புனைகதை உலகில் புதிய அனுபவத்தை வழங்கியவர் எனத் தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகர் பிரபாஸ். ‘ரெபெல் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர், தனது அடுத்தடுத்த […]

ஜீவா நடிக்கும் “தகப்பன்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைப் புதிய போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வருகிறது. அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. […]

கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே நடித்த அக்கா வெப் தொடரின் டீசர் வெளியானது!

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘அக்கா’ (Akka) வெப் தொடரின் டிரெய்லரை நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. அதிகாரம், பாரம்பரியம், விசுவாசம் மற்றும் பழிவாங்குதலை மையமாகக் கொண்ட இந்த கேங்ஸ்டர் கதையை தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். இத்தொடர் வரும் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் கற்பனையான அரசாட்சியான பெர்னூருவை மையமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது. தலைமுறை தலைமுறையாகத் […]

நாய் சேகர் இயக்குநரின் கோயம்பத்தூர் மாப்பிள்ளை ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்திய ஊடகத் துறையில் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளைத் தயாரித்து, உருவாக்கி, வெற்றிகரமாக நடத்தி வரும் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), தற்போது திரைப்படத் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம், வரும் டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்நாடு முழுவதும் இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது. நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் […]

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ஜான் டோ – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ஜான் டோ’ (John Doe) திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், அர்ஜுன் தாஸ் முதன்முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இயக்குநர் மதுமிதா மற்றும் கதாசிரியர் நிக்கோலஸ் […]

50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நடிகை அனுமோல்!

நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமியை முன்னிட்டு, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் உழைக்கும் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நடிகை அனுமோல் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களின் கடின உழைப்பைக் கௌரவித்தார். ‘அயலி’ இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் தள ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அனுமோல். அனைவரும் சமம் என்ற எண்ணத்தைக் கொண்ட இவர், தன்னைச் சந்தித்து ஆட்டோகிராப் கேட்கும் ரசிகர்களுக்கு ‘Always Choose Kindness’ என்ற வாசகத்துடன் கையெழுத்திட்டுக் கொடுப்பதை வழக்கமாகக் […]