சூர்யா – த்ரிஷாவின் ‘கருப்பு’: ‘ராத்து ராசன்’ பாடல் வெளியீடு!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் த்ரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘ராத்து ராசன்’ (Raathu Raasan) இன்று வெளியானது. சாய் அபயங்கர் இசையில் உருவான இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சூர்யா – த்ரிஷா இணைந்திருக்கும் இத்திரைப்படம், வரும் மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.  

கிரிக்கெட் வீரராக ஜி.வி. பிரகாஷ்: ‘ஜோ’ பட இயக்குநருடன் இணையும் புதிய கூட்டணி!

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ஜொலித்து வரும் ஜி.வி. பிரகாஷ் குமார், தனது அடுத்த படத்தில் கிரிக்கெட் வீரராகக் களம் இறங்கவுள்ளார். ‘ஜோ’ (Joe) திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த இயக்குநர் ஹரிஹரன் ராம் விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் ஒரு கிரிக்கெட் வீரராக நடிக்கிறார். இதற்காக அவர் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. ‘ஜோ’ படத்தில் உணர்ச்சிகரமான காதலை அழகாகக் கையாண்ட இயக்குநர் ஹரிஹரன் ராம், இப்படத்திலும் ஒரு வலுவான கதையம்சத்தை […]

தனுஷின் ‘D56’ படத்திலிருந்து ருக்மிணி வசந்த் விலகல்? சாரா அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை!

‘லப்பர் பந்து’ புகழ் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ் நடிக்கவுள்ள ‘D56’ திரைப்படம் குறித்த புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க ருக்மிணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போது அவர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பிரசாந்த் நீல் இணையும் பிரம்மாண்ட தெலுங்குப் படத்தில் கமிட் ஆகியுள்ளார். அந்தப் படத்திற்கு அதிக கால்ஷீட்கள் தேவைப்படுவதால், தனுஷின் ‘D56’ படத்திற்குத் தேதிகள் ஒதுக்குவதில் அவருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ருக்மிணி வசந்த் […]

ரஜினி 173: அடுத்தடுத்து மாறும் இயக்குநர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் படுவேகமாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவரது 173-வது திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது. முதலில் இப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்து, பின் கதை தொடர்பான கருத்து வேறுபாடுகளால் அவர் விலகினார். அவரைத் தொடர்ந்து ‘டான்’ பட புகழ் சிபி சக்ரவர்த்தி இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஆரம்பகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. குறிப்பாக, இப்படத்தின் அறிவிப்பு வீடியோ மற்றும் அதன் […]