சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய கருத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான புரிதல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் நான் கூறிய கருத்து தொடர்பாக ஏற்பட்டுள்ள தவறான புரிதலை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எப்போதும் எனது ரசிகர்களையும் பொதுமக்களையும் என் தாய்க்கு நிகராக மதித்து வந்துள்ளேன். ஆனால், நான் மக்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசியதாக சிலர் தவறான தகவல்களை பரப்பி […]

மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’ ஜூன் 19 முதல் திரையரங்குகளில்!

பாபுஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் அபிஜித் பாபுஜி தயாரிப்பில், வர்ஷா வாசுதேவ் எழுதி இயக்கியுள்ள உணர்வுபூர்வமான திரைப்படம் ‘சின்ன சின்ன ஆசை’. இந்தப் படம் வரும் ஜூன் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது. மனிதர்களின் மனதில் மறைந்து கிடக்கும் சிறிய சிறிய ஆசைகள், உணர்வுகள் மற்றும் வாழ்க்கைப் பயணத்தில் உருவாகும் உறவுகளின் அழகை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த ஃபீல்-குட் திரைப்படம், காசி நகரில் எதிர்பாராத விதமாக […]

ஜி.வி பிரகாஷுக்கு தங்க சங்கிலி பரிசளித்த பாடகர் வேல்முருகன்!

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அதேசமயம், அவர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள சாதனையையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சிறப்பு நாளை முன்னிட்டு, ஜி.வி. பிரகாஷ் இசையில் பல வெற்றிப் பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர் வேல்முருகன், தனது அன்பின் அடையாளமாக “100 Films GV Sir” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை ஜி.வி. பிரகாஷுக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் வேல்முருகனின் […]

நடிகர் கிங்காங் தாத்தா ஆனார்!

பிரபல நடிகர் கிங்காங் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு தனது மகள் கீர்த்தனாவின் திருமணத்தை அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ஏராளமான முக்கிய பிரபலங்கள் பங்கேற்ற விழாவாக பிரம்மாண்டமாக நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில், இன்று (15.06.2026) அதிகாலை சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கீர்த்தனா – நவீன் தம்பதியினருக்கு அழகான, ஆரோக்கியமான பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளது. பேத்தி பிறந்த மகிழ்ச்சியில் திளைத்து வரும் நடிகர் […]

அஜித் சாரின் லெ மான்ஸ் பயணம் இந்திய மோட்டார் விளையாட்டின் வரலாற்றுச் சாதனை – இயக்குநர் விஜய் நெகிழ்ச்சி பதிவு

உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் சவாலான மோட்டார் விளையாட்டு போட்டிகளில் ஒன்றான 24 மணி நேர லெ மான்ஸ் (24 Hours of Le Mans) போட்டியை நேரில் கண்டு ரசித்த அனுபவம் குறித்து இயக்குநர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உணர்வுபூர்வமான பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வரலாற்றுச் சிறப்புமிக்க 24 மணி நேர லெ மான்ஸ் போட்டியை நேரில் கண்டு, அதை பதிவு செய்ய அழைத்ததற்காக அஜித் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. […]