ஓடிடியில் வெளியான யோகி பாபுவின் கெணத்த காணோம்!

திரையரங்குகளில் கவனம் பெற்ற யோகி பாபு நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் தற்போது JioHotstar ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கிய இந்த படம், கிராமப்புற வாழ்க்கை, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் சாதாரண மக்களின் போராட்டங்களை நகைச்சுவை கலந்த நையாண்டி பாணியில் சொல்லும் சமூகப் பொருத்தமுள்ள படைப்பாக உருவாகியுள்ளது. வறட்சியால் அவதிப்படும் ஒரு கிராமத்தை மையமாகக் கொண்ட இப்படத்தில், தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண கிராம மக்கள் கிணறு தோண்டும் […]

Sony LIV-ல் வெளியாகும் ‘அதிரடி’ – இந்த படத்தை தவறவிடக் கூடாத 5 காரணங்கள்!

கல்லூரி நாட்கள் என்றாலே நட்பு, காதல், போட்டி, கலாட்டா, கொண்டாட்டம் என மறக்க முடியாத நினைவுகள் மனதில் வந்து சேரும். அந்த கேம்பஸ் வாழ்க்கையின் உற்சாகத்தையும், இளமைத் துடிப்பையும், நகைச்சுவையையும் கலந்த முழுமையான பொழுதுபோக்கு அனுபவமாக உருவாகியுள்ளது மலையாள திரைப்படமான ‘அதிரடி’ (Athiradi). ஜூன் 19 முதல் Sony LIV ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த திரைப்படம், கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான ஒரு கலர்ஃபுல் என்டர்டெய்னராக ரசிகர்களை கவர தயாராக உள்ளது. இந்த படத்தை […]

முதலமைச்சர் விஜய்க்கு மறக்க முடியாத பரிசை வழங்கிய விஷால்!

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷால், வழக்கமான மரியாதை பரிசுகளுக்கு பதிலாக சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விலைமதிப்பற்ற பரிசை வழங்கியுள்ளார். நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் பல ஆண்டுகளாக பொருளாதார வசதி குறைந்த மாணவ, மாணவிகளின் கல்விக்காக தொடர்ந்து உதவி செய்து வருகிறார். மேலும், விழாக்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பொன்னாடை, பூங்கொத்து போன்ற பாரம்பரிய பரிசுகளை வழங்குவதை தவிர்த்து, அதற்கு மாற்றாக கல்வி உதவிகளை […]

கரு. பழனியப்பனின் “குக்கர்” படத்தின் தலைப்பை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, கரு. பழனியப்பன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படமான ‘குக்கர்’ படத்தின் தலைப்பை மு.க. ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த சந்திப்பு மற்றும் தலைப்பு வெளியீட்டு நிகழ்வு சினிமா வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. சமூக கருத்துக்களை மையமாகக் கொண்டு பல திரைப்படங்களை இயக்கியுள்ள கரு. பழனியப்பன், […]

ஜூலை 2026-ல் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது பவிஷ் நாராயணின் ‘லவ் ஓ லவ்’!

காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. இளைஞர்கள் முதல் குடும்ப ரசிகர்கள் வரை அனைவரையும் கவரும் இந்த வகை திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவாகி வரும் நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய காதல் பொழுதுபோக்கு திரைப்படம் தான் ‘லவ் ஓ லவ்’. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரித்துள்ள […]

தமிழ் சினிமாவின் புதிய சாக்லேட் பாய் அஜய் கார்த்தி – கௌதம் கார்த்திக் பாராட்டு

எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படம் ‘டார்க்’. இந்தப் படத்தின் முன்னோட்ட (டிரைலர்) வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு கதை எழுதியுள்ள இப்படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்ட […]

சினிமா எனக்குப் போதையாக இருந்தது: மனம் திறந்த நடிகை சமந்தா!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மா இண்டி பங்காரம்’. இத்திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ராஜ் நிடிமோரு மற்றும் ஹிமங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோருடன் இணைந்து, சமந்தா தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ (Tralala Moving Pictures) பேனரின் கீழ் தயாரித்துள்ளார். தற்போது இப்படத்திற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், […]

அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்; ஜூலை 3 ரிலீஸுக்கு தயாராகும் பிரம்மாண்ட படம் இயக்குநர் அபிஷேக் நாமாவின் கனவுத் திட்டமாக உருவாகியுள்ள ‘நாகபந்தம்’ திரைப்படம், வரும் ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி, படத்தின் புரமோஷன் பணிகள் வித்தியாசமான முறையில் தொடங்கப்பட்டுள்ளன. NIK ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்தப் படத்தின் விளம்பர நிகழ்வாக, ஹைதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரை கோலாகலமாக தொடங்கிவைக்கப்பட்டது. […]

‘தி டார்க் ஹெவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையோர மர்மக் கொலைகளை மையமாகக் கொண்ட க்ரைம் த்ரில்லர் ‘தி டார்க் ஹெவன்’ ஜூலை 17-ல் ரிலீஸ்! தமிழ் சினிமாவில் புதிய பாணியிலான க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் வரும் ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியிலும், நாட்டார் கதைகளின் மர்மத் தன்மையையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேக்கரை என்ற […]