பரிமளா அண்ட் கோ – திரைவிமர்சனம்

நடுத்தர குடும்ப வாழ்க்கையின் இயல்பான தருணங்கள், நகைச்சுவை, சஸ்பென்ஸ் மற்றும் சமூக கருத்தை ஒன்றாக கலந்து சொல்ல முயன்றிருக்கும் படம் தான் ‘பரிமளா அண்ட் கோ’. ஜெயராம் – ஊர்வசி தம்பதியினர் தங்கள் இரண்டு மகள்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், மகளுக்கு ரவுடி சாண்டி கொடுக்கும் காதல் தொல்லை குடும்பத்தின் நிம்மதியை சீர்குலைக்கிறது. அந்த பிரச்சனை உச்சத்தை எட்டும் நேரத்தில் சாண்டி மர்மமாக கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலைக்கு பின்னால் இருப்பவர் யார் என்பதை […]

பெத்தி – திரைவிமர்சனம்

அடையாளமே இல்லாத ஒரு கிராமத்தின் கனவுகளையும், அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு இளைஞனின் விடாமுயற்சியையும் மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் விளையாட்டு நாடகத் திரைப்படம் தான் ‘பெத்தி’. இந்திய அரசின் பதிவுகளில்கூட இடம்பெறாத ஒரு பழங்குடியின கிராமத்தில் வாழும் மக்கள், தங்களுக்கான அடையாளம் மற்றும் அங்கீகாரத்தை பெற போராடி வருகிறார்கள். அந்த சமூகத்தைச் சேர்ந்த ராம் சரண், விளையாட்டு மூலமாக சாதித்தால் தனது மக்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கையுடன் பயணிக்கிறார். ஆனால் அவரது பாதையில் சதி, துரோகம், […]

கே.ஜே.ஆரின் “அங்கீகாரம்” படத்திற்கு “யு” தணிக்கை சான்றிதழ்

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்று அனைவரும் பார்க்கக்கூடிய படமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படம் வரும் ஜூன் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லரும், முதல் பாடலான ‘சட்ட சட்ட சட்ட சான்றோரே’ பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜிப்ரான் இசையமைப்பில், கவிஞர் கார்த்திக் […]

61 வயதில் மூன்றாம் திருமணம் செய்யும் நடிகர் அமீர் கான்!

பாலிவுட் திரையுலகில் ‘மிஸ்டர் பெர்ஃபெக்ட்டாpermission’ (Mr. Perfectionist) என்று அழைக்கப்படும் முன்னணி நடிகர் அமீர் கான். கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை சற்று குறைத்துக் கொண்ட அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு வெளியான ‘சித்தாரே ஜமீன் பர்’ (Sitaare Zameen Par) என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக களம் இறங்கினார். இதுமட்டுமின்றி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் மெகா பட்ஜெட் படமான ‘கூலி’ திரைப்படத்தில் ஒரு […]